நெல்லையில் நிற்பதற்கு பா.ஜ.க. சீட் தரவில்லை என்றதும் தன்னுடைய மனைவி ராதிகாவை விருதுநகர் தொகுதியில் நிறுத்தினார் நடிகர் சரத்குமார். அதோடு, தன்னுடைய கட்சியையும் பா.ஜ.க.வில் இணைத்துவிட்டார்.

இந்த நிலையில், விருதுநகரில் புகழ்பெற்ற மாரியம்மன் கோயிலில் நடிகர் சரத்குமார் திடீரென அங்கப்பிரதட்சணம் செய்து வழிபட்டார். மேல் சட்டையைக் கழட்டிவிட்டு கோயிலை உருண்டு வந்தார். அவர் மீது மஞ்சள் தண்ணீர் தெளிக்கப்பட்டது மட்டுமின்றி, ஆகோ… அய்யாகோ என்று கோஷம் போட்டார்கள்.

இது குறித்து பேசிய சரத்குமார் ஆதரவாளர்கள், ‘பிரதமர் மோடி மீண்டும் பாரதப் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் மனைவி ராதிகா விருதுநகரில் எம்.பி. ஆகவேண்டும் என்பதற்காகவும் அங்கப்பிரதட்சணம் மேற்கொண்டேன்’ என்று கூறியிருக்கிறார்.

அதுசரி, இதனை தேர்தலுக்கு முன்பே செய்திருந்தால் கொஞ்சம் வாக்குகளாவது கிடைத்திருக்கும் என்று விருதுநகர் மக்கள் சொல்கிறார்கள். சினிமாவில் சரத்குமாருக்கும் விஜயகாந்திற்கும் இடையில் பனிப்போர் நடந்து வந்த நிலையில், ராதிகாவுக்கு விஜயகாந்தின் மகனை நிறுத்தி எடப்பாடி பழனிசாமி இடைஞ்சல் கொடுத்ததாகவும் கூறியிருக்கிறார்.

மாரியம்மன் அருள் சரத்குமாருக்கு இருக்குதான்னு நாளைக்குப் பார்த்திடலாம்.  

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link