Share via:
நெல்லை ரசிகர்களை கவுரவிக்கும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் செய்த காரியம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஞானவேல் இயக்கத்தில் ‘தலைவர் 170’ திரைப்படத்திற்கான படப்பிடிப்பில் முழுவீச்சில் இறங்கியுள்ளார். இத்திரைப்படத்தின் பூஜை திருவனந்தபுரத்தில் நடந்து முடிந்த நிலையில் தற்போது நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
அதன்படி நெல்லை பணகுடியில் ஆர்.எம்.எஸ். தொழிற்சாலையில் நடக்கும் படப்பிடிப்புக்காக ரஜினிகாந்த் தனது காரில் சென்ற போது, தன்னை பார்ப்பதற்காக காத்துக் கொண்டிருந்த ரசிகர்களை கண்டார். உடனடியாக காரை நிறுத்திய அவர், கார் கண்ணாடியை இறக்கி ரசிகர்களை நோக்கி இன்முகத்துடன் கையசைத்தார். அப்போது ரசிகர்கள் ஆரவாரத்துடன் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘தலைவர் 170’ திரைப்படத்தில் நடிகர் அமிதாப்பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சுவாரியர், துஷாரா விஜயன், ரித்திகாசிங் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

