Share via:
நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி மாவட்டத்திற்கு திடீர் விசிட் அடித்துள்ளார். பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க தூத்துக்குடிக்கு சென்றதாக சொல்லப்பட்ட நிலையில், வேட்டையன் படப்பிடிப்புக்காக வந்தது தெரியவந்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், பகத் பாசில், மஞ்சுவாரியர், ரித்திகா சிங், துஷாரா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகும் வேட்டையன் திரைப்படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கி வருகிறார். இத்திரைப்படத்திற்கான முதல்கட்ட படபிடிப்பு கன்னியாகுமரியில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து கேரளா, மும்பை, சென்னை ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்டது.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் திடீரென்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு சென்றுள்ளார். விமான நிலையத்தில் இருந்து அவர் வெளியில் வரும் காட்சிகள் தற்போது எக்ஸ் பக்கத்தில் வைரலாகி வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் சார்பில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் சமீபத்தில் வழங்கப்பட்டது.
தென் மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பை பல தரப்பினர் பார்வையிட்டு மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய நிலையில், ரஜினிகாந்தும் அதே நோக்கத்துடன் தான் வந்திருப்பார் என்று சொல்லப்பட்ட நிலையில், வேட்டையன் திரைப்படத்திற்கான படப்பிடிப்புக்காக தூத்துக்குடிக்கு விசிட் அடித்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.