News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

 

நடிகர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா மற்றும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் நிச்சயதார்த்தம் சிறப்பான முறையில் நடைபெற்றது.

 

தமிழ் திரையுலகில் ஆக்ஷன் கிங் என்று அன்புடன் அழைக்கப்படுபவர் அர்ஜூன். இவர் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ரசிகர்களை பெற்றிருந்தார். அதைத்தொடர்ந்து இரும்புத்திரை உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகர் விஜய்யுடன் இணைந்து லியோ திரைப்படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை மிரட்டியுள்ளார்.

 

இதற்கிடையில் இவரது மூத்த மகளும், நடிகையுமான ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் காதல் திருமணம் நடைபெற இருப்பதாக கோலிவுட்டில் பேச்சு அடிபட்டுக் கொண்டிருந்தது.

 

இந்நிலையில் அதை உண்மையாக்கும் வகையில் ஐஸ்வர்யாவுக்கும், உமாபதிக்கும் நிச்சயதார்த்தம் சிறப்பாக நடைபெற்றது. அதோடு விரைவில் திருமணத் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அர்ஜூன் குடும்பத்தாருக்கும், நடிகர் தம்பி ராமையாவின் குடும்பத்தாருக்கும் ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link