Share via:
வெல்லப்போறான் விவசாயி சின்னத்தை இழந்துவிட்டாலும் எப்போதும் போல்
தனிக்காட்டு ராஜாவாக களம் இறங்குகிறார் சீமான். இன்று அவரது 40 வேட்பாளர்களையும் ஒரே
நேரத்தில் மேடையில் ஏற்றி அறிமுகம் செய்ய இருக்கிறார்.
இதற்காக ஒரு நாள் முழுக்க வேட்பாளர்களுக்கு சூட்டிங் வைத்து, அவர்களுக்கு
பேசுவதற்கு சொல்லிக்கொடுத்து முழு நேர இயக்குனராக மாறிவிட்டார் நாம் தமிழர் சீமான்.
ஒவ்வொரு வேட்பாளர்களும் திடீர் நடிகர்களாக மாறி எப்படி பேசுவது, எப்படி தேர்தல் பரப்புரை
செய்வது என்று நடித்துக் காட்டியிருக்கிறார்கள்.
இந்த நிலையில் இன்று மாலை நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர்
சீமான் தலைமையில் பல்லாவரம் – துரைப்பாக்கம் சாலை, 200அடி ரேடியல் சாலையில் மாபெரும்
பொதுக்கூட்டம் நடத்த இருக்கிறார்.
இந்த பொதுக்கூட்டத்தில், நாடாளுமன்றத் தொகுதிவாரியாக நியமிக்கப்பட்டுள்ள
வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் பொறுப்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கிறார்கள். அதோடு
மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கு எதிராக முக்கிய அறிவிப்பு வெளியிட இருப்பதாகவும்
சொல்கிறார்கள்.
ஜெயிப்பது சிரமம் என்று தெரிந்தாலும் தொடர்ந்து தனி ரூட்டில் செல்லும்
சீமானுக்கு இந்த தேர்தலில் எத்தனை சதவிகிதமோ..?