News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை இந்த மாதம் முன்னதாகவே வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் கூறப்படுகிறது.


கடந்த செப்டம்பர் 15ம் தேதி முதல் மகளிருக்கு 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் தமிழகத்தில் தொடங்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தில் விண்ணப்பித்து தேர்வானவர்களான 1.06 கோடி பயனாளர்களின் வங்கிக்கணக்கில் கடந்த மாதம் 15ம் தேதி முதல் 1,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் 30 நாட்களுக்கு மேல்முறையீடு செய்யலாம் என்றும் அரசு அவர்களுக்கு மற்றொரு வாய்ப்பை வழங்கியுள்ளது.


இந்நிலையில் இந்த மாதம் (அக்டோபர்) 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் மகளிர் உரிமைத் தொகை 14ம் தேதி (சனிக்கிழமை) வங்கிக்கணக்கில் வரவுவைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலால் ஒருநாள் முன்கூட்டியே உரிமைத் தொகை கிடைக்கும் என்று மகளிர் மிகவும் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link