News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

கர்நாடக உதயநாளை முன்னிட்டு அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா, நடனக்குழுவினருடன் இணைந்து நடமானடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

மைசூர் என்ற பெயர் கர்நாடகா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட 50வது ஆண்டு பொன்விழா கர்நாடகத்தில் களைகட்டியது. பொன்விழாவை முன்னிட்டு கர்நாடக மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்ள கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா, விஜயநகர மாவட்டம் ஹம்பிக்கு நேற்று இரவு (நவ.2) சென்றிருந்தார்.

 

அங்கு விழா மேடையில் ‘வீர மக்களா குனிதா’ என்ற நடனக்குழுவுடன் இணைந்து சித்தராமையா நாட்டுப்புற நடமானடி அனைவரையும் உற்சாகப்படுத்தினார். தாளத்திற்கு ஏற்ப நடனக்குழுவினருடன் சந்தோஷத்தோடு சித்தராமையா நடனமாடியதை கண்ட அமைச்சர்கள், தொண்டர்கள் உள்ளிட்டோர் ஆரவாரம் செய்தனர்.

 

கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா இந்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு, ‘நடனமாடும் போது தனது குழந்தை பருவ நாட்களை நினைவுகூர்ந்ததாக’’ தெரிவித்துள்ளார். வீரமக்கள் குனிதா என்பது மைசூர் மொழியில் நடைமுறையில் உள்ள ஒரு நாட்டுப்புற நடன வடிவம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link