Share via:
லியோ திரைப்படம் வெற்றியடைய வேண்டிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திருப்பதி சென்றுள்ள வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீப காலமாகவே புதிதாக வெளிவரக்கூடிய திரைப்படம் வெற்றியடைய வேண்டும் என்று ஒட்டுமொத்த படக்குழுவே திருப்பதிக்கு சென்று சிறப்பு தரிசனம் செய்கிறார்கள்.
அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் வருகிற 19ம் தேதி உலகளவில் ரிலீசாக உள்ளது. இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா ரத்தானதால் ரசிகர்களுடன் சேர்த்து ஒட்டுமொத்த படக்குழுவே சோர்ந்து போனது. அதைத்தொடர்ந்து டிரெய்லர் சர்ச்சையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் நேற்று (அக்.11) அவர்களை துள்ளிக்குதிக்க வைக்கும் வகையில் தமிழக அரசு லியோ திரைப்படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளித்தது. அதன் தொடர்ச்சியாக லோகேஷ் கனகராஜ், தனது நண்பரும் இயக்குனருமான ரத்னகுமாருடனும் படக்குழுவுடனும் சேர்ந்து திருப்பதிக்கு சென்றுள்ளார்.
இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்ஸ்டாவில் ரத்னகுமார் இந்த வீடியோவை பகிர்ந்து ‘லியோ படத்தின வெற்றிக்காக நாங்கள் திருப்பதி வந்துள்ளோம்’ என்று கேப்ஷன் போட்டுள்ளார். இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் தற்போது வைரலாக்கி வருகிறார்கள்.

