News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

நிர்வாண படத்தில் நான் நடித்தேன் என்றும் நான் கெட்டவள் என்றும் தெலுங்கு தேசம் கட்சியின் முன்னனள் அமைச்சர் அவதூறு பரப்புகிறார் என்று நடிகையும் அமைச்சருமான ரோஜா கண்ணீர் மல்க பேசிய வீடியோ  தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

தெலுங்கு தேசம் கட்சி முன்னாள் அமைச்சர் பண்டாரு சத்திய நாராயணமூர்த்திக்கும் அமைச்சர் ரோஜாவுக்கும் இடையிலான போர் எப்போது முடியும் என்று தெரியவில்லை. இவர்களின் சண்டையால் ஆந்திராவில் பரபரப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏற்கனவே தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

இதற்கிடையில் அமைச்சர் ரோஜா, நிர்வாண படத்தில் நடித்ததாக கூறி அது தொடர்பாக சி.டி.யும் சட்டசபையில் காட்சிப்படுத்தப்பட்டாலும் அது ரோஜாதான் என்று நிரூபிக்கப்படவில்லை.

 

இந்நிலையில் அமைச்சர் ரோஜா திருப்பதியில் உள்ள தனது வீட்டில் கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார். அதில், ‘‘தெலுங்கு தேசம் கட்சியின் பெண்களுக்கு மரியாதை இல்லை. பெண்கள் தங்கள் விருப்பப்படி வாழ வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளநிலையில் என் குணத்தை மதிப்பிட நீங்கள் யார்? என்று கேள்வி எழுப்பினார்.

 

உங்கள் வீட்டு பெண்களைப் பற்றி இப்படி யாராவது பேசினால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? தெலுங்கு தேசம் கட்சியினர் அவர்களது முன்னாள் அமைச்சர்ளான பண்டாரு சத்திய நாராயணன், காந்தா ஸ்ரீனிவாஸ், அய்யண்ணபத்ரா ஆகியோரை கண்டிக்காதது ஏன் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

 

பண்டாரு சத்தியநாராயணமூர்த்தியின் கருத்து தன்னை மிகவும் புண்படுத்திவிட்டதாக கதறி அழுத ரோஜா, அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடருவேன் என்று தெரிவித்துள்ளார். ரோஜாவின் கண்ணீர் விட்டு பேட்டி கொடுத்த வீடியோ தற்போது ஆந்திரா மட்டுமல்லாமல் நாடு முழுவதும் வெளியாகி வைரலாகி வருகிறது.

 

சந்திரபாபு நாயுடு கைதான போது ரோஜா தனது ஆதரவாளர்களுடன் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link