Share via:
டெல்லி மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்த முதியவரை, இளைஞர் ஒருவர் சரமாரியாக தாக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி, மும்பை நகர மெட்ரோ ரெயில் மற்றும் ரெயில் நிலையங்களில் பல்வேறு அத்துமீறல்கள் நடக்கும் வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாவது வழக்கம். காதல் ஜோடிகளின் அத்துமீறல்கள், வன்முறை சம்பவங்கள் என வெளியாகும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் நெஞ்சை பதற வைத்துவிடுகிறது.
இந்நிலையில் மெட்ரோ ரெயிலில் பயணித்துக் கொண்டிருந்த முதியவர் ஒருவரை இளைஞர் சரமாரியாக தாக்கிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இதை பார்த்து பதறிப்போன சக பயணிகள் அந்த இளைஞரை தடுக்க முயற்சித்த போது அந்த இளைஞர் தகாத வார்த்தைகளால் அனைவரையும் திட்டித் தீர்த்துள்ளார். இந்த காட்சிகளை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இது குறித்த தகவல் கிடைத்த டெல்லி மெட்ரோ ரெயில் நிறுவனம் தீவிர விசாரணை நடத்தி வருகிறது.