News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

பாகுபலி நடிகர் பிரபாஸ் கன்னத்தில் ரசிகை ஒருவர் பளார் விட்ட வீடியோ தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது.


நடிகர் பிரபாஸ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். அதிலும் அவரது பாகுபலி திரைப்படம் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்று யார் இந்த பிரபாஸ் என்று அடையாளம் காணப்பட்டார்.


இருப்பினும் பிரபாசின் சமீபத்திய படங்களான ராதேஷியாம், ஆதிபுருஷ் உள்ளிட்ட திரைப்படங்கள் சரியாக வெற்றி பெறவில்லை. தற்போது சலார் திரைப்படத்தில் பிரபாஸ் மும்முரமாக பணியாற்றி வருகிறார். இத்திரைப்படம் வருகிற டிசம்பர் 22ம் தேதி உலகளவில் ரிலீசாகிறது. அதேபோல் அமிதாப்பச்சன், கமல்ஹாசன், தீபிகாபடுகோன், பசுபதி ‘கல்கி 2829 ஏடி’ திரைப்படத்திலும் பிரபாஸ் நடித்து வருகிறார்.


இந்நிலையில் விமான நிலையத்தில் ரசிகை ஒருவர் பிரபாசுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்ட பின்னர், உணர்ச்சிவசப்பட்டு பிரபாசின் கன்னத்தில் செல்லமாக பளார் விடுகிறார். அதன் பின்னர் ரசிகை துள்ளிகுதிக்க, பிரபாஸ் ரசிகை பளார்விட்ட கன்னத்தை தொட்டுப் பார்த்து சிரிக்கிறார். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link