News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

அரசியல்வாதிகள் என்றால் அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்கு மட்டுமே செல்வார்கள். உடல் நோய் என்றால் தனியார் மருத்துவமனையில் போய் படுத்துக்கொள்வார்கள். இவர்களில் விசித்திரமானவர் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு.

அவருக்கு உடல்நிலை சரியில்லாதபோதெல்லாம் அவர் மருத்துவம் பார்த்துக்கொள்ள சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்குத்தான் சென்றார். ஒரு கட்டத்தில் அந்த ராஜீவ்காந்தி மருத்துவமனையுடன் ரெகுலர் நோயாளியாகவும் வேலை செய்யும் அனைவருக்கும் செல்லப்பிள்ளையாகியும் இருந்தார் நல்லகண்ணு.

இன்று அதே மருத்துவமனையில் மருத்துவ பாடம் படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கு தானே பாடமாக நிரந்தரமாக இருக்க போகிறார் தோழர் நல்லகண்ணு. ஆம், அவர் உடல் இன்று ராஜிவ்காந்தி மருத்துவமனையிடம் ஒப்படைக்கப்படுகிறது.

அவர் உடலை அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள்… மருத்துவமணை ஊழியர்கள், .மருத்துவ மாணவர்கள் சோகம் ததும்ப கண்ணீருடன் பெற்றுக் கொண்டார்கள். இப்படி ஒரு தலைவனை வரும் காலத்திலும் மருத்துவ மாணவர்கள் பார்க்கவும் படிக்கவும் போகிறார்கள்.

நிரந்தரமாக வாழ்வார் நல்லகண்ணு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link