Share via:

மிஸ்டர் பணிவு, மூன்று முறை முதல் அமைச்சர் என்றெல்லாம் ஓ.பன்னீர்செல்வம்
மீது மக்களுக்குக் கொஞ்சம் மரியாதை இருந்தது. தர்மயுத்தம் என்று தொடங்கி சசிகலாவை அம்பலப்படுத்தப்
போகிறேன் என்று சொன்னவர் அப்படியே பல்டி அடித்து மீண்டும் சசிகலாவின் அடிமையாக மாறினார்.
அவரும் அ.தி.மு.க.வை கைப்பற்றிக் காட்டுகிறேன் என்று சவால் விட்ட டிடிவி தினகரனும்
திடீரென ரோட்டில் சந்தித்துப் பேசியது செம கலாய்க்கு ஆளாகியுள்ளது.
எடப்பாடி பழனிசாமி அமைச்சரவையில் துணை முதல்வராக இருந்துகொண்டே
கட்சிக்குள் தொடர்ந்து வம்பு வழக்கு என்று தீவிரம் காட்டிய காரணத்தால் ஒட்டுமொத்தமாக
கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்டார். உரிமை மீட்புக் குழு என்று தொடங்கி நாலைந்து
தொண்டர்களுடன் ஊர் சுற்றிக்கொண்டு இருக்கிறார்.
அதேபோல் இன்னொரு அரசியல் அனாதை டிடிவி தினகரன். இன்னும் ஒரு வாரத்தில்
கட்சி என் கைக்கு வந்துவிடும், என் ஸ்லீப்பர்செல் அங்கே இருக்காங்க என்றெல்லாம் பேசிவந்த
டிடிவி தினகரன் இப்போது பா.ஜ.க. காலில் விழுந்து இன்னொரு கொத்தடிமையாக மாறிவிட்டார்கள்.
தி.மு.க.வை தோற்கடிக்க வேண்டும் என்றால் அ.தி.மு.க. வலிமையாக வேண்டும்.
அ.தி.மு.க. வலிமையாக வேண்டும் என்றால் எங்களை கட்சிக்குள் சேர்த்துக்கொள்ள வேண்டும்
என்று ஆயிரம் முறை இருவரும் கோரிக்கை வைத்தபிறகும் எடப்பாடி பழனிசாமி கண்டுகொள்ளவே
இல்லை. இருவரும் வரும் தேர்தலில் பா.ஜ.க.வில் இணைவதா அல்லது இப்படி தனித்து நின்று
கேவலப்படுவதா என்று புரியாமல் தவிக்கிறார்கள்.
இந்த நிலையில் நேற்று இருவரும் தற்செயலாக எதிரும் புதிராக நடு
ரோட்டில் சந்தித்திருக்கிறார்கள். கழக நிகழ்ச்சிக்குச் சென்ற நேரத்தில் அ.ம.மு.க. கழக
பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர்,
முன்னாள் தமிழக முதலமைச்சர் பன்னீர்செல்வமும் தேனி அருகே நடுரோட்டில் எதிர்பாராமல்
சந்தித்துப் புலம்பித் தீர்த்திருக்கிறார்கள். அதாவது, ‘உன்னால நான் கெட்டேன், என்னால
நீ கெட்ட என்று இருவரும் கட்டிப்பிடித்து அழுதிருப்பார்கள்’ என்றே தெரியவருகிறது.
பரிதாபம் தான்.