Share via:
உத்தரபிரதேசத்தில் டெல்லி – சஹர்சா வைசாலி அதிவிரைவு ரெயிலில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் சிக்கி 19 பயணிகள் காயமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் எட்டவா அருகே சென்று கொண்டிருந்த டெல்லி – சஹர்சா வைசா அதிவிரைவு ரெயிலின் எஸ்.6 பெட்டியில் இன்று அதிகாலை 2.12 மணியளவில் திடீரென்று புகை வந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் உடனடியாக ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் இந்த ரெயில் ரெயில் மெயின்பூரி சந்திப்புக்கு முன்பாக உடனடியாக நிறுத்தப்பட்டது.
ஏற்கனவே அங்கு வந்து சேர்ந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் தீ விபத்தில் 19 பேர் காயமடைந்துள்ள நிலையில் அதில் 11 பேர் மேல் சிகிச்சைக்காக சாய்ஃபை மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவராத நிலையில், விபத்துக்குள்ளான எஸ்.6 பெட்டி மட்டும் தனியாக பிரிக்கப்பட்டு, காலை 6 மணியளவில் விரைவு ரெயில் மீண்டும் இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.