Share via:
இந்துக்கள், முஸ்லீம்கள் குறித்து பேசினாலே நான் பொதுவாழ்க்கையில்
இருக்கும் தகுதியை இழந்துவிடுவேன் என்று சமீபத்தில் பேசியிருந்த மோடி, மீண்டும் பிரிவினை
ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் மீது குற்றம் சுமத்தியிருக்கிறார்.
மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டம், திண்டோரியில் நடைபெற்ற பாஜக
பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், “மதத்தின் அடிப்படையில் நாட்டில்
பிளவை ஏற்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டு உள்ளது. மதத்தின் அடிப்படையில் மத்திய பட்ஜெட்டை
பிரிக்கவும் அந்த கட்சி திட்டமிட்டிருக்கிறது. இதன்படி காங்கிரஸ் சார்பில் இந்துக்கள்,
முஸ்லிம்களுக்கு தனித்தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பட்ஜெட்டில் முஸ்லிம்களுக்கு
15 சதவீதம் ஒதுக்கப்படும்’’ குரல் கொடுத்துள்ளார்.
இது தவிர தென்னிந்தியாவில்
முழுமையாகத் தேர்தல் முடிந்துவிட்டது. ஆகவே, இனி தென்னிந்தியர்கள் வாக்குகள் தேவையில்லை
என்பதால் வட இந்தியர்களுக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார். அதாவது, தென் இந்தியர்கள்
வட இந்தியர்களை அவமதிக்கிறார்கள். வட இந்திய மொழிகளை அவமதிக்கிறார்கள் உத்திர பிரதேச
மக்களை கேவலமாக பேசுகிறார்கள் எனவும் குற்றம் சுமத்தியிருக்கிறார்.
இதற்கு பதிலளிக்கும்
காங்கிரஸ் தலைவர்கள், ’’காங்கிரஸ் கட்சி முஸ்லிம்களுக்கு தனிபட்ஜெட்டும்,
இந்துக்களுக்கு தனி பட்ஜெட்டையும் தாக்கல் செய்யும் என்று பிரதமர் குற்றம் சாட்டி உள்ளார்.
இது முழுக்க முழுக்க பொய். சட்டப்பிரிவு 112-ன்படி ஆண்டுக்கு ஒரு மத்திய பட்ஜெட்டை
மட்டுமே தாக்கல் செய்ய முடியும். சட்டத்தை மீறி எவ்வாறு இரு பட்ஜெட்டுகளை தாக்கல் செய்ய
முடியும்?’’ என்று கேள்வி எழுப்பியிருக்கிறது.
ஆட்சி அமைக்கப்போவது காங்கிரஸ் என்பதை மோடியே ஒப்புக்கொள்கிறாரா
என்றும் கேள்வி எழுப்புகிறார்கள்.