தனியார் நிறுவனம் நடத்த உள்ள பார்முலா4 கார்பந்தயம் சென்னையில் ஆகஸ்டு மாத இறுதியில நடைபெற உள்ளது. இதனை நடத்துவதற்காக தி.மு.க. அரசு தீவிரம் காட்டி வருவது ஏன்? என்ற கேள்வி அரசியல் நோக்கர்கள் மற்றும் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

 

தனியார் நிறுவனம் கடந்த ஆண்டு (2023) பார்முலா4 கார் பந்தயத்தை நடத்த ஏற்பாடு செய்திருந்தது. ஆனால் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக இப்போட்டி ஒத்திவைக்கப்பட்டது.

 

இந்நிலையில் ஆகஸ்டு மாதம் 30ம் தேதி தொடங்கும் இப்போட்டியானது செப்டம்பர் மாதம் 1ம் தேதி என 3 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை, அண்ணாசாலை, துறைமுகம் என சென்னையின் மத்திய பகுதியில் பார்முலா4 கார் ரேஸ் நடைபெறுவதற்காக இப்போட்டிக்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. தனியார்  நிறுவனங்கள் நடத்தும் கார் பந்தயங்களுக்காக என பிரத்யேகமாக இருக்கும் சென்னை அல்லாத புறநகர் பகுதிகளில் போட்டியை நடத்தாமல் சென்னையில் மையப்பகுதியில் ஏன் நடத்த வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கொதித்து போயுள்ளனர்.

 

பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் தனியார் நடத்தும் இப்போட்டியினை சிறப்பாக நடத்தி முடிக்க ஏன் தமிழக அரசு இவ்வளவு தீவிரம் காட்டுகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.  இதில் இன்னொரு பக்கம் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி இப்போட்டியில் அதிக தீவிரம் காட்டி வருவது எதற்காக என்றும், இதனால் மக்களுக்கு என்ன பயன் என்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link