News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் எம்.எஸ்.தோனியை இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் புது கெட்டப்பில் யோகிபாபு சந்தித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

எம்.எஸ்.தோனி சர்வதேச கிரிக்கெட் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் படத்தயாரிப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து முதல் திரைப்படமாக ‘எல்.ஜி.எம்.’ திரைப்படத்தை தயாரித்தார். அதன் இசைவெளியீட்டு விழாவில் எம்.எஸ்.தோனியும் நடிகர் யோகிபாபுவும் அடித்த லூட்டி பல நாட்களுக்கு இணையத்தில் வைரலாகி ரசிக்க வைத்தது.

 

யோகிபாபுவை சி.எஸ்.கே.வில் விளையாட பரிந்துரை செய்வேன் என்று தோனி சொல்வதற்கு முன்பாகவே இருவருக்குமான நட்பு ரசிகர்களை சிலிர்க்க வைத்தது. அடிக்கடி யோகிபாபுவுக்கு தோனி கிரிக்கெட் பேட்களை பரிசளித்து வருகிறார்.

 

இதற்கிடையில் யோகிபாபு புது கெட்டப்பில் இயக்குனர் விக்னேஷ்சிவனுடன் இணைந்து எம்.எஸ்.தோனியை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. யோகிபாபு என்றாலே அவரது வணங்காமுடிதான் நினைவுக்கு வரும். ஆனால் தற்போதைய புதிய கெட்டப்பில் புள்ளிங்கோ ஹேர் ஸ்டைல் என்று சொல்வதா அல்லது வேறு ஏதேனும் ஹேர் ஸ்டைலா என்று குழம்பி போயுள்ளனர் ரசிகர்கள். இந்த சந்திப்பின் போது தோனியுடன் அவரது நண்பர் ரசல் உள்ளிட்டோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்தில் நடிகர் ராம்சரண், எம்.எஸ்.தோனியை சந்தித்தார். தற்போது விக்னேஷ் சிவன், யோகிபாபு சந்தித்துள்ளனர். இந்த சந்திப்புகளின் பின்னணியில் திரைப்படத் தயாரிப்பு குறித்த அறிவிப்புகள் வெளிவருமா என்று ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். அத்திரைப்படத்தில் தோனியே கதாநாயகனாக நடித்தால் கூட நன்றாகத்தான் இருக்கும் என்கிறார்கள் அவரது ரசிகர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link