கொள்கை வீரர், லட்சியப் போராளி என்றெல்லாம் அரசியல் ஆசான் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரால் மேடைக்கு மேடை போற்றிப் புகழப்படும் திருமாவளவனின் கூட்டணிக் குழப்பம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை. அவரது ஸ்டாலின் விசுவாசத்திற்கும் தன்மானத்திற்கும் இடையில் கட்சியின் மானமும் மதிப்பும் ஊஞ்சலாடுகிறது. 

நேற்று முளைத்த காளான் விஜய் கூட, நான் ஆட்சிக்கு வந்தால் எல்லோருக்கும் ஆட்சியில் பங்கு கொடுப்பேன் என்று அறிவித்து திருமாவளவனுக்கு வரவேற்பு கொடுக்கிறார். எடப்பாடி பழனிசாமியும், ‘நல்லவர்கள் பக்கம் திருமாவளவன் நிற்பார்’ என்று அவருக்காக துண்டு போட்டு வைக்கிறார். திருமாவுக்கும் தன்மானத்துடன் வாழ ஆசை தான். பா.ஜ.க.வை தவிர யாருடனும் கூட்டணி சேர்வதற்கு திருமாவளவன் தயாராகவே இருக்கிறார்.

அதேநேரம், ரொம்பவே அவமானப்படுத்தினாலும் எம்.பி. சீட், எம்.எல்.ஏ. சீட்களுக்கு ஆபத்து இல்லை என்பதால் மண்டியிடாத மானம் என்று சொல்லிக்கொண்டே மண்டி போட்டுவருகிறார் திருமாவளவன். இவர் வெளியே போனால் நல்லது என்பதே தி.மு.க.வின் அரசியல் கணக்காகவும் இருக்கிறது. ஒருவேளை திருமாவளவன் வெளியே போய்விட்டால், அடுத்ததாக பா.ம.க..வை உள்ளே கொண்டுவரலாம் என்று தி.மு..க. கணக்கு போடுகிறது.

இது நன்றாகவே தெரிந்தபடியால், மனதில் ஆசை இருந்தாலும் ஸ்டாலின் காலை விடாமல் கட்டிப் பிடித்துக்கொண்டிருக்கிறார் திருமாவளவன். அதேநேரம், கூடுதலாக ஒன்றிரண்டு சீட் கிடைத்தால் நல்லது என்பதற்காக ஆதவ் அர்ஜுனா மூலம் அறிக்கையும் விடச் சொல்கிறார். இன்னும் எத்தனை நாட்களுக்கு இப்படி திருமாவளவன் நாடகம் போடப் போகிறாரோ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link