Share via:
அமிர்தசரசில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தேசிய கால்பந்து வீரர் கார் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அதிர்தசரஸ் பகுதியைச் சேர்ந்த சர்தாஜ்சிங் தேசிய அளவிலான கால்பந்து வீரராக இருந்து வந்தார். இவர் தனது சகோதரருக்காக சந்தையில் ரொட்டி விநியோகம் செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் சர்தாஜ்சிங், வழக்கம் போல் தனது இருசக்கர வாகனத்தில் ரொட்டிகளை விநியோகம் செய்வதற்காக புறப்பட்டார். அப்போது கல்சாயா பகுதியில் சென்று கொண்டிருந்த போது அதிவேகமாக வந்த ஹோண்டா சிட்டி கார், சர்தாஜ்சிங் வாகனத்தின் மீது பலமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சர்தாஜ்சிங் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், உயிரிழந்த தேசிய கால்பந்து வீரர் சர்தாஜ்சிங்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப் வைத்தனர். தேசிய கால்பந்து வீரர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சக விளையாட்டு வீரர்களையும், அப்பகுதி மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

