News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

மறுமலர்ச்சி தி.மு.க.வின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ தமிழகம் முழுக்க தொடர்ந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கெடுத்து வருகிறார்.

சமீபத்தில் தமிழ்த் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.

இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திருவண்ணாமலை மாவட்டம், முன்னாள் மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் எஸ்.ஏ.அண்ணாமலையை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். இதுகுறித்து அவர், ‘நான் மீண்டும் மீண்டும் இயக்க தோழர்களுக்கு குறிப்பிடுவது அனைவரும் தங்களது சக்திக்கு ஏற்றவாறு மருத்துவ காப்பீடு செய்து கொள்ள வேண்டும். முன்கூட்டியே மருத்துவ காப்பீடு செய்து இருந்தால் பிரபல மருத்துவமனையில் பெரும் தொகை செலவழிக்க நேர்ந்து இருக்காது. எனவே இயக்க தோழர்கள் அனைவரும் மருத்துவ காப்பீடு செய்து கொள்வது அவசியம்…’ என்று வலியுறுத்தினார்.

இன்று காலை மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் மதுரை புறநகர் வடக்கு மாவட்ட ஒத்தக்கடையில், ‘பூமித்தாயை காப்போம்’ என இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டி பிரமாண்டமான மாரத்தான் போட்டியை தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியை மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் மார்நாடு ஏற்பாடு செய்திருந்தார்.

தொண்டர்கள் அரசியல் தெளிவுடன் இருப்பதுடன் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கும் வழி காட்டிவருகிறார் துரை வைகோ.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link