Share via:
பதவி ஆசை எந்த அளவுக்கு ஒரு குடும்பத்தை சிதைக்கும் என்பதற்கு வாழும் உதாரணமாக இப்போது மாறியிருக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி. டாக்டர் ராமதாஸ்க்கும் அன்புமணிக்கும் இடையில் நடக்கும் பதவிப் போட்டியில் கட்சித் தொண்டர்களே பரிதாபத்துக்கு ஆளாகியுள்ளனர்.
தேர்தல் முடிந்தபிறகு இந்த உரிமைப் பிரச்னையை வைத்துக்கொள்ளலாம் என்று ராமதாஸ், அன்புமணி ஆகியோரிடம் வைத்த கோரிக்கை எதுவும் எடுபடவில்லை. கொள்கை என்று கட்சிக்கு எதுவுமில்லை, பெட்டியே முக்கியம் என்று இருவரும் மோதிவருகிறார்கள்.
முதல் ஆளாக அன்புமணி நேரில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து கூட்டணியை உறுதி செய்திருக்கிறார். ஆனால், ராமதாஸ் கூட்டணி என்றால் எங்களுடன் மட்டுமே பேச வேண்டும் என்று வம்பிழுப்பது மட்டுமின்றி, அவரும் தனியே கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
திமுகவை ராமதாஸ் எத்தனை கேவலமாக திட்டியிருக்கிறார் என்பது எல்லோருக்குமே தெரியும். ஆனால், அதையெல்லாம் மறந்துவிட்டு இப்போது திமுகவுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கிறார். தாங்கள் ஜெயிப்பதற்கு பேச்சுவார்த்தை, கூட்டணி என்பதையெல்லாம் தூக்கியெறிந்துவிட்டு, அன்புமணியை தோற்கடிப்பதற்கு ஒரு கூட்டணிக்குத் தயாராகிறார்.
ஆக, இந்த தேர்தலில் மாம்பழத்துக்கு சங்கு ஊதப்படும் என்றே தெரிகிறது. இப்படியெல்லாம் ஒரு கட்சி இருப்பது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு.

