Share via:
மயிலாடுதுறை மாவட்டம், கூறைநாடு செம்மங்குளம் பக்கத்துல நைட் 11 மணிக்கு ரொம்ப சாதாரணமா ஒரு சிறுத்தை நடந்து போனத பாத்த மக்கள் அப்படியே ஃப்ரீஸ் ஆகிட்டாங்க.
திருப்பதி, ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட வனப்பகுதியில இருக்கிற சிறுத்தை, புலி, யானை உள்ளிட்ட விலங்குகள் சாலையில நடந்து போறது வர்றது சகஜமான விஷயம்தான். ஆனா மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு பகுதியில சிறுத்தை ரொம்ப கேஷூவலா நடந்து போயிருக்கு.
முதல்ல அத நாய்ன்னு நினைச்சிருக்காங்க. ஆனா பாக்க அன்யூஷூவலா இருந்த பிறகுதான் அத சிறுத்தைன்னு கண்டுபிடிச்சாங்க. இதைத்தொடர்ந்து போலீசுக்கும், வனத்துறைக்கும் மக்கள் தகவல் கொடுத்தாங்க. அங்கிருந்த சிசிடிவி காட்சிகள பாத்த போது அது சிறுத்தைன்னு கன்பார்ம் ஆகியிருக்கு.
அசம்பாவிதங்கள தடுக்க சுற்றுவட்டாரப் பகுதிகள்ல இருக்கிற ஸ்கூல்களுக்கு லீவ் விடப்பட்டிருக்கு. மேலும் பொதுமக்கள் அனாவசியமா வெளிய வரவேண்டாம்னு எச்சரிக்கைவிட்டிருக்காங்க. கோடை காலம் அப்படிங்குறதால திருச்சியில இருந்து பெரம்பூர் வழியா சிறுத்தை வந்திருக்கலாம்னு சொல்லப்படுது. மேலும் கூடிய சீக்கிரமே சிறுத்தைய பிடிச்சிடலாம்னு சொல்றாங்க அதிகாரிகள்.