News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

தொடர் கனமழை காரணமாக மஞ்சளாறு கரையோர மக்களுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

தேனி மாவட்டத்தில் அமைந்துள்ள பெரியகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கல்லாறு, செம்மலாறு, கும்பக்கரை ஆறு உள்ளிட்ட ஆறுகளில் நேற்று மாலை முதல் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் சோத்துபாறை அணை அதன் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் வராக நதி மற்றும் மஞ்சளாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றங்கரை பகுதி மக்கள் ஆற்றில் இறங்கி குளிக்கவோ மற்றும் ஆற்றை கடக்கவோ வேண்டாம் எனவும் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சௌந்தர் மற்றும் வருவாய் துறை வட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

 

மஞ்சளாறை பொறுத்த வரையில் அணையின் நீர்மட்டம் தற்போது 51.60 அடியாக உயர்ந்துள்ளது. (அணையின் முழு கொள்ளளவு 57 அடி) நீர்வரத்து 122 கன அடி ஆகவும் நீர் வெளியேற்றம் 100 கன அடியாகவும் உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் (அணையின் நீர்மட்டம் 127 அடி) முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் நீர்வரத்து 100 கன அடியாகவும் நீர் வெளியேற்றம் 300 கன அடியாகவும் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link