News

கூட்டணியை கோட்டை விட்ட விஜய்… வேட்பாளர்கள் எங்கேப்பா..?

Follow Us

பாமகவில் இருந்து ஓரங்கட்டப்பட்ட ராமதாஸும் அதிமுகவில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட சசிகலாவும் நேற்றைய தினம் புதிய கூட்டணி அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இந்தக் கூட்டணி 234 தொகுதிகளிலும் போட்டி என்று சொன்னதை அத்தனை பேரும் நகைச்சுவையாகவே பார்க்கிறார்கள்.

உண்மையில் இது ஆபத்தான கூட்டணி. எடப்பாடி பழனிசாமி மற்றும் அன்புமணிக்கு போடப்பட்டுள்ள பக்கா ஸ்கெட்ச். ஏனென்றால் இந்த கூட்டணியின் நோக்கம் வெற்றி பெறுவத அல்ல. அதற்கு வாய்ப்பு இல்லை என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

அதேநேரம் தங்களை ஓரங்கட்டிய அதிமுவையும் மற்றும் பாமகவையும் தோற்கடிப்பதுதான் இவர்களுடைய ஒரே லட்சியம்.  வட மாவட்டங்களில் சுமார் 40 தொகுதிகளில் வன்னியர் சமூக வாக்குகள் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளன. ராமதாஸ் நேரடியாகக் களம் இறங்கும்போது, அன்புமணி மீது அதிருப்தியில் உள்ள பழைய விசுவாசிகள் மற்றும் தீவிரத் தொண்டர்களின் வாக்குகள் சிதறும். ஒரு தொகுதியில் 5,000 முதல் 10,000 வாக்குகளை ராமஹாஸ்  பிரித்தால் கூட, அது அன்புமணி தரப்பை மண்ணைக் கவ்வ வைத்துவிடும்.

அதேபோல் தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் சமூக வாக்குகளைப் பிரிப்பதே சசிகலாவின் திட்டம். கிட்டத்தட்ட 30 தொகுதிகளில் சசிகலா களம் இறக்கும் வேட்பாளர்கள், எடப்பாடி பழனிசாமி தரப்பின் வெற்றி வாய்ப்பை முழுமையாகச் சிதைக்கப் போகிறார்கள்.

இப்படி வாக்குகள் சிதறும்போது, பலமான கட்டமைப்பைக் கொண்டுள்ள திமுக-விற்கு அது சாதகமாக முடியும். உண்மை என்னவென்றால் தங்களை உதாசீனப்படுத்தியவர்களுக்குத் தங்கள் பலத்தைக் காட்டவும், தோல்விக்குப் பிறகு கட்சியும் தொண்டர்களும் மீண்டும் தங்களை நாடி வர வேண்டும் என்பதற்காகவும் போட்டியில் குதிக்கிறார்கள்.

மக்களுக்கு இது காமெடியாகத் தெரியலாம். ஆனால் எடப்பாடிக்கும் அன்புமணிக்கும் சிக்கலோ சிக்கல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link