Share via:
இன்று மாலை 4 மணியளவில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று மாலை 4 மணியளவில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார்.
இக்கூட்டத்தில் கட்சி கிளை அமைப்புகளை பலப்படுத்துவதற்கான ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது. பா.ஜ.க.வுடனான கூட்டணியை முறித்த பிறகு வரவிருக்கும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்கை முன்வைத்து அ.தி.மு.க.வின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பூத் கமிட்டி மற்றும் கிளை அமைப்புகளை பலப்படுத்துவதற்கான ஆலோசனைகளையும் எடப்பாடி பழனிசாமி கேட்டறிய உள்ளார். மேலும் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை அமைப்புகளின் களப்பணி மற்றும் தேர்தல் பணிகள் குறித்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் மூலம் கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.