Share via:
கடந்த 95 வருடங்களாக ஒரு குறிப்பிட்ட நாட்டில் ஒரு குழந்தை கூட பிறக்கவில்லை என்ற தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உலகின் மிகச்சிறந்த நாடு தான் வாட்டிகன். இதன் பரப்பளவு வெறும் 118 ஏக்கர்தான். இங்கு மருத்துவமனைகளே கிடையாது. மருத்துவமனை வேண்டும் என்று பல முறை கோரிக்கை எழுந்தும் அது நிராகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டில் பெண்கள் கர்ப்பிணியானாலோ அல்லது மக்கள் நோய்வாய்பட்டாலோ அவர்கள் ரோமில் உள்ள மருத்துவமனைக்குதான் செல்ல வேண்டும்.
வாட்டிகனில் மருத்துவமனையும், பிரசவ அறையும் இல்லாததால் இங்கு யாரும் பிரசவம் பார்த்தது கிடையாதாம். அதே போல் இயற்கையான குழந்தை பிரசவமும் நடந்தது இல்லை என்றும் கூறப்படுகிறது.
இங்கு வசிக்கும் மக்களுக்கு நிரந்தர குடியுரிமை கிடைப்பது இல்லை. இங்கு வசிப்பவர்கள் தங்கள் பதவிக்காலம் வரை மட்டுமே தங்கி, தற்காலிக குடியுரிமை மட்டுமே பெறுகிறார்கள். இதன் காரணமாக எதிர்காலத்தில் நிரந்தர குடியுரிமை பெறக்கூடிய பிறப்பே இங்கு இல்லையாம்.
இங்குள்ள பெண்கள் எப்போது கர்ப்பம் தரிக்கிறார்களோ, அவர்கள் பிரசவ நேரம் நெருங்கும் போது, அங்கு கடைபிடிக்கப்படும் விதிகளின்படி குழந்தையை பெற்றெடுக்கும் வரை அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். அந்த வகையில் கடந்த 95 வருடங்களாக வாட்டிகன் நகரில் ஒரு குழந்தைகூட பிறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி தற்போது இணையத்தில் மக்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.