News

முதல்வர் போட்டியில் தனுஷ்…? வெளுக்கும் விஜய் ரசிகர்கள்

Follow Us

ஜெயிலர் திரைப்படம் இமாலய வெற்றி பெற்றதைத் தொடர்ந்து ரஜினிகாந்தை ரெட் ஜெயண்ட் இணை  தயாரிப்பாளர்கள் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இயக்குனர் நெல்சன் திலீப்குமார், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அனிரூத் கூட்டணியில் ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்டு மாதம் 10ம் தேதி உலகளவில் வெளியானது. இப்படம் ரிலீசாகி ஒரு மாதத்தைக் கடந்தும் திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது.

ஓடிடியில் ஜெயிலர் படம் வெளியான போதும் கூட ரசிகர்கள் கூட்டம் திரையரங்குகளுக்கு படையெடுத்து வருவதாக சோசியல் மீடியாவில் செய்திகள் தீயாக பரவி வருகிறது.

ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிகாந்த், மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் உள்ளிட்ட சூப்பர் ஸ்டார்கள் இடம்பெற்றதால்  பான் இந்தியா படத்திற்கான முழு அடையாளமாக வெளியானது.

ஜெயிலர் திரைப்படம் ரூ.525 கோடிக்கு மேல் வசூலை குவித்து வருகிறது. இதன் வெற்றியைத் தொடர்ந்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் அதன் இணை தயாரிப்பாளர்கள், நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். 

இது குறித்த புகைப்படங்கள்  தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. வழக்கம் போல் ரஜினிகாந்த் எளிமையாக காட்சியளித்தது  ரசிகர்கள் மத்தியில் டிரெண்டிங் செய்யப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link