Share via:
இயக்குனர் அட்லி இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டஷாருக்கான் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜவான்’ திரைப்படம் வெளியான ஒரேநாளில் உலகம் முழுவதும் ரூ.129 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோலிவுட் இயக்குனர் அட்லி, முதன்முறையாக பாலிவுட்டிற்கு சென்று இயக்கியுள்ள திரைப்படம் ஜவான். இத்திரைப்படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், தீபிகா படுகோன், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, விஜய்சேதுபதி, யோகிபாபு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ள நிலையில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் நேற்று முன்தினம் (செப்.7&ம் தேதி) வெளியானது.
ஜவான் திரைப்படம் வெளியான முதல்நாளிலேயே உலகம் முழுவதும் ரூ.129.6 கோடி வசூலித்துள்ளதாக இத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவை பொறுத்தவரை ரூ.75 கோடி வசூலானதாகவும், இதற்கு முன்னர் வெளியான பதான் திரைப்படம் வசூலித்த ரூ.57 கோடி வசூலை ஜவான் திரைப்படம் முறியடித்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுவரை வெளியான அனைத்து பாலிவுட் படங்களின் முதல்நாள் வசூலையும் ‘ஜவான்’ திரைப்படம் முறியடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. பல்வேறு திரைப்படங்களில் காப்பிதான் ஜவான் திரைப்படம் என்று இயக்குனர் அட்லியே சோசியல் மீடியாவில் மீம்ஸ்கள் கிழித்து தொங்கவிடும் நிலையிலும் ஜவான் திரைப்படம் வசூலில் சாதனை படைத்துள்ளது ஷாருக்கான் ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

