News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

நடிகரும் தனது தந்தையுமான கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைவது குறித்து நடிகை ஸ்ருதிஹாசன் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 

யூடியூப் உள்ளிட்ட இணையதள பக்கங்களில் அடிக்கடி சினிமா பிரபலங்களை பேட்டியெடுத்து வைரலாக்குவதை  வாடிக்கையாக வைத்துள்ளன. அதன்படி நடிகை ஸ்ருதிஹாசனுடைய நேர்க்காணலில் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன.

 

எப்போதும் ஸ்டைலிஷ் ஐகானாக இருக்க விரும்பும் ஸ்ருதிஹாசனுக்கு அவரது தந்தை கமல்ஹாசன் பெரும்பாலும் சேலைகளையே பரிசாக அளிப்பாராம். அதிலும் மஞ்சள் மற்றும் வெள்றை நிற சேலைகளையே பரிசளித்துள்ளார். இதனால் தனக்கு கருப்பு மற்றும் கருநீல நிறத்தில் சேலைகளை வாங்கித்தரும்படி கமல்ஹாசனிடம் கேட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

அதேபோல் தந்தை கமல்ஹாசனை வைத்து திரைப்படம் இயக்க திட்டமிருக்கிறதா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘‘ஐயோ எனக்கு தலை சுற்றுகிறது. அவருடன் யாருமே போட்டி போட முடியாது’’ என்று பதில் அளித்திருக்கிறார்.

 

நடிப்பு, பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர், அரசியல் கட்சித் தலைவர் என பன்முகம் கொண்ட நடிகர் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசனிடம், வருங்காலத்தில் கட்சியில் யாருடனாவது இணைவீர்களா என்ற கேள்விக்கு ஒரே வார்த்தையில் ‘இல்லை’ என்று பளிச்சென்று பதில் அளித்திருக்கிறார்.

 

இந்த பேட்டியை பார்த்த கமல்ஹாசன் ரசிகர்கள், தந்தை எப்போதும் சுற்றிவளைத்து புரியாத பல உதாரணங்களை தந்து ரசிகர்களை குழப்பிவிடும் நிலையில், மகள் ஸ்ருதி, ஒரே வார்த்தையில் பளிச்சென்று பதில் சொல்கிறாரோ என்று சமூகவலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link