Share via:
‘உலகநாயகன்’ கமல்ஹாசன் புதிதாக நடிக்க உள்ள அடுத்த படத்தின் டிரெண்டிங் போஸ்டர் வெளியானதை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ‘இந்தியன்2’ திரைப்படம் படப்பிடிப்புகள் முடிந்து தொழில்நுட்பப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் நடிகர் கமல்ஹாசன், பாகுபடி நடிகர் பிரபாஸ் இணைந்து நடிப்பதற்கான புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இத்திரைப்படத்திற்கு ‘கல்கி 2898 ஏடி’ என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில் இதில் கமல்ஹாசன் மிரட்டல் வில்லனாக நடிக்க இருக்கிறார். மேலும் இத்திரைப்படத்தில் அமிதாப்பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடிக்க உள்ளனர்.
ரூ.600 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என 6 மொழிகளில் உருவாக உள்ள இத்திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்குகிறார். மேலும் இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். நடிப்பு, இசை என பெரிய ஜாம்பவான்கள் இணைந்துள்ள இத்திரைப்படத்திற்கான புதிய போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இத்திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான போஸ்டரை டேக் செய்த படக்குழு, இந்த படத்தில் அமிதாப்பச்சன் இணைவதை நாங்கள் பெருமையாக கருதுகிறோம்’ என்று பதிவிட்டுள்ளது.

