News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

போக்குவரத்து நெரிசல் காரணமாக நடிகர் ஹிருத்திக் ரோஷன் மெட்ரோ ரெயிலில் பயணிகளுடன் சாதாரணமாக பயணம் செய்தது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஹிருத்திக் ரோஷன் இன்று மும்பை மெட்ரோ ரெயிலில் பயணிகளுடன் சேர்ந்து பயணம் மேற்கொண்டார். படப்பிடிப்புக்கு சென்று கொண்டிருந்த அவர் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் திடீரென்று மெட்ரோவில் பயணம் செய்ய முடிவு செய்துள்ளார்.

 

ஹிருத்திக் ரோஷன் தன்னுடைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம். அதன்படி மும்பை டிராபிக் காரணமாக படப்பிடிப்பு தளத்திற்கு செல்வதில் தாமதமாகும் என மெட்ரோவில் பயணம் செய்ததாக புகைப்படங்களையும், வீடியோவையும் வெளியிட்டார். இது தற்போது வைரலாகி வரும் நிலையில், அவருடன் செல்பி எடுத்துக் கொண்டவர்கள் சந்தோஷத்தில் துள்ளி குதித்து வருகின்றனர்.

 

மேலும் அந்த பதிவின் கேப்ஷனில் ‘இன்று மெட்ரோவில் படப்பிடிப்பு தளத்திற்கு சென்றேன். அங்கு நிறைய அன்பான மக்களை சந்தித்தேன். சிறப்பான அனுபவமாக இருந்தது. ஆக்ஷன் காட்சிகள் இன்று இருக்கும் நிலையில் கடுமையான வெயிலையும் டிராபிக்கையும் சமாளித்துவிட்டேன்’’ என்று  பதிவிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link