Share via:
ஆப்கானிஸ்தானில் 4 நாட்களில் 4 ஆயிரம் பேர் நிலநடுக்கத்தில் பலியானதாக வெளியான தகவல் சோகத்தையும் அதிர்ச்சி¬யும் ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் கடந்த 7ம் தேதி அடுத்தடுத்து 6 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இது குறித்து நில அதிர்வுக்கான தேசிய மையம் கூறும்போது, ரிக்டர் அளவுகோலில் 6.1, 5.6, 6.2, 5.9, 5.0, 4.7 ஆக பதிவான நிலையில் இன்று மீண்டும் 6.1 அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்றைய நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறித்த தகவல் எதுவும் கிடைக்காத நிலையில் கடந்த 7ம் தேதி நிலநடுக்கத்தால் கடந்த 4 நாட்களில் மட்டும் 4 ஆயிரம் பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே கடந்த 7ம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தில் ஹெராட்டில் உள்ள 20 கிராமங்களில் 1,983 குடியிருப்பு வீடுகள் மண்ணோடு மண்ணாக சரிந்தது. இந்த இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தால் முற்றிலும் நிலைகுலைந்து போயுள்ளது என்பது வேதனையான உண்மை.

