Share via:
தீவிரமடைந்து வரும் போர் தாக்குதலை சமாளிக்க காசாவில் இருந்து 2.6 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், இரு தரப்பிலும் சேர்த்து பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை கடந்துவிட்டதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேல்& பாலஸ்தீனம் இடையே 5வது நாளாக போர் தீவிரமடைந்து வருகிறது. இதுவரை 3 ஆயிரம் வரை கொல்லப்பட்டதாகவும் அதில் அதிமானோர் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் நாட்டின் மீது போர் தொடுத்து வருகின்ற நிலையில் காசா மீது தாக்குதல் நடத்தினால் பிணைக்கைதிகளை கொல்வோம் என்று ஹமாஸ் பயங்கரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். அதன்படி 40 குழந்தைகளின் தலைகளை துண்டித்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளது.
இதற்கு பதிலடியாக காசாவின் முக்கிய பகுதிகளில் உள்ள பல்வேறு கட்டிடங்களில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இப்பகுதிகளில் ஹமாஸ் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக சொல்லபடும் நிலையில் இஸ்ரேல் இந்த தாக்குதலை நடத்தி வருகிறது.
இந்நிலையில் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்க காசாவில் இருந்து 2.6 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. மேலும் அவர்கள் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. அதோடு அவர்கள் எகிப்து எல்லையிலும், இஸ்ரேல் முகாம்களிலும் தங்கவைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் அவர்களுக்கு தேவையான மருத்துவம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை உதவிகளையும் ஐ.நா.வின் மனித உரிமை ஆணையம் மற்றும் உலக சுகாதார அமைப்புகள் முழுவீச்சில் செய்து வருகின்றன

