Share via:
இஸ்ரேலில் 40 குழந்தைகளின் தலைகளை ஹமாஸ் பயங்கரவாதிகள் துண்டித்தும் சிலரை உயிரை எரித்தும் கொலை செய்துள்ளதாக உள்ளூர் செய்தி ஊடகங்களில் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆயிரக்கணக்கில் ஏவுகணைகள் பாய்வதும், பெண்கள், குழந்தைகள் என பாராமல் ஹமாஸ் தீவிரவாதிகள் கொலை செய்து வருவதும் சர்வதேச நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இந்த மோதலில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினால் பிணைக்கைதிகளை கொலை செய்து அதனை டி.வி.யில் நேரடியாக ஒளிபரப்புவோம் என்று ஹமாஸ் தீவிரவாதிகள் ஏற்கனவே மிரட்டல் விடுத்திருந்தனர்.
இந்நிலையில் உள்ளூர் ஊடகங்களில் அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ஹமாஸ் பயங்கரவாதிகள் கஃபர் ஆசா பகுதியில் 40க்கும் மேற்பட்ட குழந்தைகளின் தலைகளை துண்டித்தும், சிலரை உயிருடன் எரித்தும் கொலை செய்ததாக சொல்லப்படுகிறது. மேலும் ஹமாஸ் பயங்கரவாதிகள் அங்குள்ள கிராமத்தில் வீடுகள் மற்றும் வாகனங்களை எரித்து நாசமாக்கியதாகவும், காற்றில் உயிரிழந்தவர்களின் உடல்களில் இருந்து துர்நாற்றம் வீசி வருவதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது அதிர்ச்சி¬ ஏற்படுத்தியுள்ளது.
இந்த செய்தி உண்மையா என்பது குறித்து இஸ்ரேல் ராணுவம் விரைவில் அறிவிப்பு வெளியிடும் என்று கூறப்படுகிறது.

