News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாத குழு நடத்திய ஏவுகணை தாக்குதலில் இதுவரை 700 பேர் உயிரிழந்துள்ளதாக அங்கிருந்து வரும் அதிகாரப்பூர்வ தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.


இஸ்ரேல் நாட்டின் மீது காசா முனையில் செயல்பட்டு வரும் ஹமாஸ் என்ற பயங்கரவாத குழு திடீரென்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் ஏவப்பட்ட ஏவுகணைககால் பெண்கள், முதியவர்கள் என ஏராளமானோர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 700க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தாக்குதலுக்கு இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மன் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


பயங்கரவாத தாக்குதலால் இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகருக்கான ஏர் இந்தியா விமானம் ஒரு வார காலத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.


இந்நிலையில் இஸ்ரேல் நாட்டில் ஹமாஸ் தீவிரவாத குழு தாக்குதலில் நேபாள மாணவர்கள் 10 பேர் உள்பட 700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாலும், இன்னும் தொடர்ந்து தாக்குதல் நடைபெற்று வருவதாகவும் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link