News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

ஆசிய விளையாட்டு போட்டியில் பங்குபெற்றுள்ள இந்தியா தனது 100வது பதக்கத்தை வென்று வரலாறு சாதனை படைத்துள்ளது.


சீனாவின் ஹாங்சோ நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டி நடைபெற்று வருகிறது. தங்கம், வெள்ளி, வெண்கலம் என பதக்கங்களை குவித்து வரும் இந்தியா இன்றைய நிலவரப்படி 100வது பதக்கத்தை வென்று வரலாறு சாதனை படைத்துள்ளது.


அதன்படி இன்று (அக்.7) காலை 8 மணிநிலவரப்படி 3 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என பதக்கங்களை வென்றுள்ளது. மகளிர் படி, வில்வித்தை ஆடவர் மற்றும் மகளிர் தனிப்பிரிவில் இந்திய அணி தங்கப்பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ளது.


காம்பவுண்டு வில்வித்தை பிரிவில் இந்தியாவின் ஜோதி சுரேகா தங்கம் வென்றுள்ளார். இதே பிரிவில் அதிதி வெண்கலப் பதக்கத்தை வென்றார். ஆடவர் தனிப்பிரிவு காம்பவுண்டு வில்வித்தை பிரிவில் ஓஜாஸ் தங்கப்பதக்கம் வென்ற நிலையில், அபிஷேக் வெண்கலம் வென்றுள்ளார்.


அதைத்தொடர்ந்து சீன தைபே அணியை எதிர்த்து விளையாடிய இந்திய கபடி அணி 26 புள்ளிகளை பெற்று தங்கப்பதக்கத்தை வென்றது. இந்த பதக்கம் இந்தியா வென்றுள்ள 100வது பதக்கம் என்பதால் தனிச்சிறப்பு வாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link