Share via:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற அக்டோபர் 15ம் தேதி முதல் நவராத்திரி பிரம்மோற்சவ விழா நடைபெற உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த செப்டம்பர் 18ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடந்து முடிந்த வருடாந்திர பிரம்மோற்சவத்தைத் தொடர்ந்து தற்போது நவராத்திரி பிரம்மோற்சவம் கோலாகலமாக நடைபெற உள்ளது.
அதைத்தொடர்ந்து நவராத்திரி பிரம்மோற்சவம் வருகிற அக்டோபர் 15ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை 9 நாட்கள் நடைபெற உள்ளது. நவராத்திரி பிரம்மோற்சவத்தின் கொடியேற்றம், கொடி இறக்கம் மற்றும் தேர் திருவிழாக்கள் நடைபெறாது என்றும் அதற்கு மாறாக தங்கத்தேரோட்டம் மட்டும் நடத்தப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தற்போது புரட்டாசி மாதம் என்பதால், திருப்பதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமிதரிசனம் செய்து வருகின்றனர். வருகிற சனிக்கிழமைகளில் கூட்டத்தை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என்று நம்பப்படும் நிலையில், நாளை (அக்.6), 7, 8, 13, 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் சர்வ தரிசன டிக்கெட்டுகள் விநியோகத்தை திருப்பதி தேவஸ்தான் நிறுத்தி வைக்க முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

