News

விஜய் அவசரக் கூட்டம். பனையூரில் விவசாயிகள் சந்திப்பு..?

Follow Us

நடிகர் விஜய் ஆண்டனி ரத்தம் திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ‘வாழ்க்கையில் நிறைய இழப்புகளை சந்தித்துவிட்டேன். வலிகளுடன் வாழ பழகுகிறேன் என்று உருக்கமாக பேசியுள்ளார்.

இசையமைப்பாளர், பாடகர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்ட விஜய் ஆண்டனி நல்ல மனிதர் என்ற பெயரையே திரையுலகில் பெற்றுள்ளார். விஜய் ஆண்டனி அவரது மனைவி பாத்திமா, 2 மகள்களுடன் சென்னையில் வசித்து வந்தார்.

இதற்கிடையில் 12ம் வகுப்பு படித்து வந்த இவரது மகள் மீரா கடந்த 19ம் தேதி (செப்.) அதிகாலையில் தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். முதல்கட்ட விசாரணையில் மன அழுத்தத்தின் காரணமாகவே மீரா தற்கொலை செய்து கொண்டார் என்று தெரிவிக்கப்பட்டது.

விஜய் ஆண்டனி தனது 7வயதில் தன்னுடைய தந்தை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்று ஒரு பேட்டியில் தெரிவித்ததும், தற்கொலை எதற்குமே தீர்வாகாது என்று முன்னர் பேசிய வீடியோ அந்த சமயத்தில் வைரலாகிக் கொண்டிருந்தது.

இந்நிலையில் நேற்று (செப்.28) சென்னை வடபழனி பிரசாத் லேபில் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் ‘ரத்தம்’ திரைப்படத்தி செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் விஜய் ஆண்டனி தனது இளைய மகள் லாராவுடன் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய விஜய் ஆண்டனி, ‘இயக்குனர் அமுதனுக்கும் தனக்கு நீண்ட நாள் நட்பு இருப்பதாகவும், அவரது ‘ரத்தம்’ திரைப்படத்தி, இணைந்து பணியாற்ற வேண்டும் என்று காத்திருந்த நீண்ட நாள் எதிர்பார்ப்பு தற்போது நிறைவேறி உள்ளதாக தெரிவித்தார்.

அதன் பின்னர் நடந்த நேர்காணலில், ‘‘வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. என்னுடைய வாழ்வில் நிறைய இழப்புகளை அனுபவித்துவிட்டேன். இப்போது வலிகளுடன் வாழ பழகிக் கொண்டிருக்கிறேன். நான் பெரிய தத்துவவாதி கிடையாது. இருந்தாலும எனக்கு ஏற்பட்ட இழப்புகளின் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன்’’ என்று உருக்கமாக பேசிய அனைவரின் கண்களையும் கலங்கவைத்துவிட்டது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link