Share via:
இரட்டை குழந்தைகளின் முதல் பிறந்தநாளை கொண்டாடிய நயன்தாரா விக்னேஷ்சிவன் சமூகவலைதளத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள்.
நட்சத்திர தம்பதியான நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் வாடகைத் தாய்மூலம் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு பெற்றோராக மாறினார்கள்.
திருமணத்திற்கு பிறகும் கோலிவுட், பாலிவுட் என நடித்துக் கொண்டிருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, காஸ்மெட்டிக்ஸ் பிசினசிலும் அடியெடுத்து வைத்துள்ளார். ஏற்கனவே பல்வேறு பிசினஸ்களை செய்து வரும் நயன்தாரா, தொடர்ந்து நடிப்பிலும் செலுத்தி வருகிறார்.
நடிகர் ஜெயம்ரவியுடன் நயன்தாரா நடித்துள்ள இறைவன் திரைப்படம் நேற்று (செப்.28) வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ராகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத் நடிப்பில் வெளியாகி உள்ள சந்திரமுகி2 திரைப்படமும், இறைவன் திரைப்படமும் போட்டி போட்டுக் கொண்டு திரையரங்குளில் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தங்களது இரட்டை ஆண் குழந்தைகளின் முதல் பிறந்தநாளை நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆனந்தமாக கொண்டாடியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்கள். ஒரே மாதிரி உடை அணிந்த இரட்டை குழந்தைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

