Share via:
சீனாவில் நடைபெற்று வரும் ஆசியப்போட்டியில் இந்தியா இன்றைய குதிரையேற்றப் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது.
சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் 9வது ஆசிய விளையாட்டு போட்டி நேற்று முன்தினம் (செப்.23) கோலாகலமாக ஆரம்பமானது. இப்போட்டியில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப்பட்டியலில் இந்தியா 7வது இடத்தில் இருந்து 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களுடன் இந்தியா தொடர்ந்து சாதனைகளை புரிந்து வருகிறது.
அதேபோல் சிங்கப்பூருக்கு எதிரான ஹாக்கி போட்டியில் இந்திய அணி 16க்கு ஒன்று என்ற கணக்கில் சிங்கப்பூர் அணியை வெற்றி பெற்று பெற்றுள்ளது.
இந்நிலையில் குதிரையேற்றம் போட்டியில் சுதிப்தி ஹஜிலா, திவ்ய கீர்த்திசிங், ஹர்டே ஷிடா, அனுஷ் ஆகியோர் அடங்கிய இந்திய அணி டிரஸ்ஏஜ் பிரிவில் தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது. இது எந்த வகையான சாதனை என்றால், கடந்த 41 ஆண்டுகளில் குதிரையேற்ற போட்டி வரலாற்றில் இந்திய அணி முதல் முறையாக தங்கப்பதக்கம் வென்றுள்ளது என்ற பெருமையை பெற்றுள்ளது. மேலும் படகு போட்டியில் இந்தியாவின் எபாத் அலி வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார்.
இந்திய அணி பெற்றுள்ள பதக்கங்களின் விவரம்:
கிரிக்கெட்-1 தங்கம்
குதிரையேற்றம்- 1 தங்கம்
துடுப்பு படகு போட்டி-2 வெள்ளி, 3 வெண்கலம்
பாய்மரப் படகு போட்டி-1 வெள்ளி, 1 வெண்கலம்
துப்பாக்கி சுடுதல்- 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம்
ஆக மொத்தம் 3 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 14 பதக்களை பெற்று பதக்கப்பட்டியலில் தற்போது இந்தியா 7வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

