Share via:
அதிமுகவில் இருந்து இதுவரை 5 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்திருக்கிறார்கள்.
தவெக பெரும்பான்மைக்கு மொத்தம் 11 எம்.எல்.ஏ.க்கள் தேவை என்பதால், இன்னும் ஏழெட்டு
எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிகிறது. திமுகவின்
உதயசூரியனில் ஜெயித்த இரண்டு மதிமுக எம்.எல்.ஏ.க்கள் அடுத்து ராஜினாமா செய்ய இருப்பது
உறுதி செய்யப்பட்டுள்ளது.
திமுகவில் கூட்டணிக்கு சீட் ஒதுக்கிய நேரத்தில் துரைவைகோ மிகப்பெரும்
அதிருப்தி தெரிவித்தார். ஆனாலும், வைகோ கூட்டணி முக்கியம் என்று மற்ற கட்சியினரையும்
ஒருங்கிணைக்கும் வேலையை மேற்கொண்டார்.
தேர்தலில் தவெக வெற்றிக்குப் பிறகு நிலைமை மாறிவிட்டது. இரண்டு
எம்.எல்.ஏ.க்கள் வைத்திருக்கும் விசிகவுக்கு ராஜ மரியாதை கிடைக்கிறது. கம்யூனிஸ்ட்
கட்சிகள், காங்கிரஸ் கட்சி எல்லாமே விஜய்யிடம் சரண்டர் ஆகிவிட்டது. திமுக சின்னத்தில்
போட்டியிட்டதால் இப்படியொரு நிலைமை என்று வைகோவுக்கு இப்போது எக்கச்சக்க ஆதங்கம். அதை
துரைவைகோவும், மதிமுகவினரும் பல இடங்களில் சொல்லிக்காட்டிவிட்டனர். இந்த நிலையில் மதிமுக
எம்.எல்.ஏ.க்கள் இருவரை ராஜினாமா செய்வதற்கு ஆதவ் கேட்டுக்கொண்ட முயற்சி பலன் அளித்துவிட்டதாக
சொல்லப்படுகிறது.
ஆதவ்வுடன் நடந்த சந்திப்பில் வைகோவுக்கு என்ன தேவை என்று கேட்டறிந்து
அதனை நிறைவேற்றித் தரும் டீல் முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. எனவே, தாயகத்திற்கு
ஒரு சோபா பார்சல் செய்யப்படுகிறது.
இதையடுத்து வரவிருக்கும் பொதுக்குழு கூட்டத்தில் வைகோ உறுப்பினர்
அனைவரும் கருத்தை ஏற்று திமுக கூட்டணியில் இருந்து வெளியே வர இருக்கிறார். இதனால் கட்சிக்குள்
கலகம் ஏற்படும் என்றாலும், அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வைகோ வந்துவிட்டார்.
வைகோ முகத்தில் தெரியும் புன்னகையே அதை காட்டிக்கொடுக்கிறது.