Share via:
விஜய்க்கு ஆதரவு கொடுத்துவிட்டு, இப்போது
என்ன செய்வது என்று புரியாமல் விழித்துக்கொண்டிருக்கும் சிவி சண்முகம் எடப்பாடி பழனிசாமி
மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகல் வைத்துவருகிறார்.
இதுகுறித்து சிவி சண்முகம், ‘’எடப்பாடி பழனிசாமி தனது
மகன் மிதுன் பழனிசாமியைப் பின்வாசல் வழியாக அரசியலுக்குள் கொண்டு வர நாடகமாடுகிறார்.
கட்சியின் செயற்குழுவைக் கூட்ட அஞ்சுவது ஏன்..? செயற்குழுவைக் கூட்டவில்லை என்றால்
அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்குத் தெரியும்” என மிகக் காட்டமான
எச்சரிக்கை விடுத்தார்.
கட்சியை விட்டு விலகுவதற்கு சில நாட்களுக்கு முன் கே.ஏ.செங்கோட்டையன் இதே போன்று வாரிசு
அரசியல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். அதோடு வன்னியர் சமூக மக்களால் தான் அதிமுக 31 தொகுதிகளில்
வென்றது என்ற அவரது கருத்தும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதுகுறித்து பேசும் அதிமுகவினர், ‘’சிவி சண்முகம்
இனி எடப்பாடியுடன் இணைந்து பணியாற்றுவதற்கு
வாய்ப்புகள் இல்லை. அதனால், கட்சித் தலைமை தன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து நீக்கட்டும்
என்பதற்காகவே அவர் இபிஎஸ்ஸை நேரடியாக எதிர்க்கிறார். கட்சியில் இருந்து நீக்கப்பட்டால்
சுயேச்சையாக மாறி மிக எளிதாக முதலமைச்சர் விஜய்யின் தவெகவில் இணைவதற்கு சண்முகம் திட்டமிட்டு
காய்களை நகர்த்தி வருகிறார்’’ என்கிறார்கள்.
இந்த நிலையில் அதிமுக ஐடி விங்கை நிர்வகித்துவரும்
ராஜ்சத்யன், ‘’அதிமுகவின் இளைஞரணி அல்லது தகவல் தொழில்நுட்ப செயலாளராக எடப்பாடி பழனிசாமியின்
மகன் மிதுனை கொண்டுவர வேண்டும் என்று கட்சி கூட்டத்தில் பேசப்பட்டதாகக் கூறப்படும்
நிலையில், `இவ்விவகாரம் எங்கே பேசப்பட்டிருந்தாலும் அது தவறுதான்’ என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
வாரிசுகள் நியமனத்தை வாரிசுகள் எதிர்ப்பது வேடிக்கை
என்கிறார்கள். அதாவது அதிமுக முன்னாள் எம்பி வேணுகோபாலின் மகன் சி.வி.சண்முகமும், அதிமுக
முன்னாள் எம்பி ராஜன் செல்லப்பாவின் மகன் ராஜ் சத்யனும் மிதுன் நியமனத்தை எதிர்ப்பது
செம காமெடி என்கிறார்கள். ஏற்கெனவே ஆத்வ் அர்ஜூனாவுடன் தொடர்பிலிருக்கும் ராஜ் சத்யனும்
வெளியே போகப் போவதாகச் சொல்கிறார்கள்.
அதேநேரம், கட்சியில் தங்களை மட்டும் வளர்த்துக்கொண்டிருந்த
குறுநில மன்னர்கள் அனைவரும் வெளியே செல்வது எடப்பாடி பழனிசாமிக்கு நல்ல வாய்ப்பு. பெருசுகள்
எல்லாம் வழி விட்டதும் புதியவர்கள் பாதையில் அதிமுக பீடு நடை போடும் என்கிறார்கள்.