News

வன்னியரசு, ஷாஜகான் பதவியேற்பு. விஜய்க்கு புதிய கூட்டணி ரெடி.

Follow Us

விஜய் கட்சிக்கு பெரும்பான்மைக்கு பெரும் போராட்டம் நடக்கிறது. நேற்று அதிமுகவின் வேலுமணி தரப்பு மூன்று எம்.எல்.ஏ-கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் சேர்ந்த நிலையில், இன்று அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ இசக்கி சுப்பையாவும் ராஜினாமா செய்திருக்கிறார்.

தொகுதி மக்களின் நலனுக்காக ராஜினாமா செய்தேன் ராஜினாமா கடித்தை வழங்கிய பின் இசக்கி சுப்பையா பேட்டி கொடுத்திருக்கிறார். அவருடன் சேர்ந்து பாப்புலர் முத்தையா, அதிமுக செய்தி தொடர்பாளர் சசி ரேகா, அதிவீரபாண்டியன் ஆகியோரும் விஜய் கட்சியில் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில் முன்னாள் சபாநாயகர் அப்பாவு, ‘’அதிமுக பொதுச்செயலாளர் அவர்கள் கட்சி தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தங்கள் சின்னத்தில் வெற்றி பெற்ற 25 சட்டமன்ற உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழக சபாநாயகர் அவர்களிடம் கொடுக்கப்பட்ட மனு நிலுவையில் இருக்கும் பொது மாண்புமிகு தமிழக சபாநாயகர் அவர்கள் அதில் மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் கொடுத்த ராஜினாமா கடிதத்தை இவ்வளவு அவசரமாக நடவடிக்கை எடுக்க தேவையில்லை…’’ என்று கூறியிருக்கிறார்.

அதேபோல் அதிமுகவினர் சபாநாயகரை சந்தித்து, ’குதிரை பேரம் நடைபெறுவதை தடுக்கும் வகையில், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் படி நடவடிக்கை புகார் நிலுவையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் அளித்தால் அதனை ஏற்றுக்கொள்ளக் கூடாது’ என கடிதம் கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால், போகிற போக்கைப் பார்த்தால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றே தெரிகிறது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link