News

மோடி வேட்டை ஆரம்பம்…? ஹோட்டல்களுக்கு மூடு விழா

Follow Us

விஜய் வெற்றி பெற்றுவிட்டாலும் முதல்வராக அமர்வது சிக்கலாக இருக்கிறது. எதிர்க்கட்சியாக வந்துவிட்டாலும் ஸ்டாலினால் எதிர்க்கட்சி தலைவராக முடியாத அளவுக்கு தோல்வி அடைந்துவிட்டார். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி இப்போதாவது விஜய்க்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று அவரது கட்சியினரே நெருக்கடி கொடுக்கிறார்கள்.

இதுகுறித்து பேசும் அதிமுகவினர் ‘’அதிமுக பிரச்சாரத்தில் தவெக கொடி பறக்கிறது என்று சொன்னார். அப்போது தவெக துணை முதல்வர் பதவி, 70 சீட், 3 அமைச்சர்கள் பதவி கேட்டனர். அப்போது கூட்டணி வைத்திருந்தால் இப்போது ஸ்வீப் அடித்திருக்கலாம். ஆனால், உங்கள் ஈகோ அதை தடுத்துவிட்டது.

அதிமுக எங்கே தவெக வுடன் கூட்டணி போய்விடக் கூடாது என்று அவசர அவசரமாக பாஜக அதிமுகவை கட்டி போட்டது. அதிமுகவின் இந்த நிலைக்கு பாஜக தான் காரணம். பாஜக ஓட்டும் கிடைக்கவில்லை. பாஜகவை கட்டி அழ என்ன பிரயோஜனம்? இனிமேலாவது, ஈகோவை விட்டு, கட்சியை பலப்படுத்தும் வழியை பாருங்கள். இப்போது விஜய்க்கு ஆதரவு கொடுங்கள்.. இல்லையென்றால், அதிமுகவை உடைக்கும் வேலையை பாஜக பார்த்துவிடும்’’ என்று எச்சரிக்கை செய்கிறார்கள்.

அதிமுக பக்கம் நடந்த ஆலோசனையில் விஜய்க்கு நிபந்தனையற்ற ஆதரவு கொடுக்க எடப்பாடி தயாராக இருப்பதாகவே தெரியவருகிறது. ஆனால், அதிமுகவை உடைத்து ஆட்களை நம் கட்சிக்கே அழைத்துவருகிறேன் என்று செங்கோட்டையன் இப்போது ஒரு முயற்சி செய்துவருகிறார்.

ஆனால், செங்கோட்டையனை அமைதியாக்கி இபிஎஸ்ஸை உள்ளே கொண்டுவந்து விடுவார் விஜய் என்கிறார்கள். இந்த நிலையில் கவர்னரிடம் ஆட்சி அமைக்கும் உரிமை கோருகிறார் விஜய். இனி, நடக்கப்போகும் அத்தனையும் சுவாரஸ்யம்தான்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link