Share via:
கிருஷ்ணகிரியில் தேர்தல் எழுச்சிப்பயணம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர்
எடப்பாடி பழனிசாமி, இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக போய்க்கொண்டிருக்கும் ஆ.ராசா
ஆடியோ குறித்துப் பேசினார். அப்போது அவர், ‘’காற்றில் கூட ஊழல் செய்த கட்சி திமுக,
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல். கனிமொழியும், ஆ.ராசாவும் காங்கிரஸ் ஆளும்போது கைது செய்யப்பட்டு
சிறையில் அடைக்கப்பட்டனர். கூட்டணியில் இருக்கும்போதே குற்றம் சுமத்தப்பட்டு திகார்
ஜெயிலில் இருந்தவர்கள் நம்மைப் பற்றி பேசலாமா?
ஜெயிலில் இருந்தவர் ஆடியோ வைரல் ஆகிவருகிறது, அதுபற்றி சொல்கிறேன்.
ஆ.ராசா ஆடியோ வெளியாகியிருக்கிறது. அதாவது, திமுகவில் கனிமொழிக்கு காட்டிய அக்கறையை
ராசாவுக்கு காட்டவில்லை. சமூகநீதி பேசும் திமுகவில் சாதியப் பாகுபாடு இருக்கிறது. கலைஞர்
டிவிக்கு பணம் போனதை ஒப்புக்கொள்கிறார். கலைஞரின் இறுதிக் காலத்தில் ஸ்டாலின் அவரை
கைதியாகத் தான் வைத்திருந்தார். ஸ்டாலின் கட்சியை கைப்பற்றி விட்டார் என்கிறார் ஆ.ராசா.
கலைஞரின் இறுதிகாலத்தில் ஸ்டாலினுக்கும் கனிமொழிக்கும் பிரச்னை
ஏற்பட்டது அதனால் தான் இந்தமுறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்புக் கிடைக்கவில்லை
என்கிறார். ஸ்டாலினுக்கு பெரிய மூளை இருக்குதா? டெல்லிக்கு போனால் ஆங்கிலத்தில் கிழித்துவிடுவாரா?
கனிமொழியை ஒருநாளும் நம்ப மாட்டார், என்னை எப்போதும் கட்சியில் இருந்து வெளியில் தள்ளமுடியாது.
என் செல்வாக்கு, என் அறிவு, என் கம்யூனிட்டி என எதையும் தள்ள முடியாது என்கிறார். ஸ்டாலின்
அவரது அப்பாவை கைதி போல வைத்திருந்தார், சொந்த அப்பாவையே அப்படி வைத்தவர் நாட்டு மகக்ளை
எப்படி வைப்பார், உண்மை செய்தி ராசா மூலம் வெளியில் வந்துவிட்டது. திமுகவின் இறுதி
அத்தியாயத்தை ஸ்டாலின் எழுதுகிறார்’’ என்று பேசியிருக்கிறார்.
அந்த ஆடியோவில் அப்படி என்ன இருக்கிறது என்று கேட்டோம்.
ஆடியோ உரையாடல் 1
ராசா : திமுகவில் இருந்து ஒரு எம்எல்ஏ
வந்திருப்பாரா, எம்பி வந்திருப்பாரா, கட்சிக்காரர்கள் வந்திருப்பார்களா..? நான் கைதாகி
2 மாதம் கழித்து கனிமொழி உள்ளே வருது. அதுவரைக்கும் நீலகிரி உட்பட எத்தனை பேர் வந்து
பார்த்தார்கள்.? என் மனநிலை சிறைக்குள் எப்படி இருந்திருக்கும். என் வீட்டில் இருந்து
ஏதாவது எடுத்தீர்களா…? கலைஞர் டிவிக்கு போச்சு பணம். அதற்கு மேல் நான் சொல்ல விரும்பவில்லை.
என் வீட்டில் ஏதாவது சிபிஐ எடுத்தானா..? யாராவது என்னை பார்க்க வந்தீர்களா..?
குரல் : நான் வந்தேன்…
ராசா : உன்னை சொல்லவில்லைப்பா….
அதிகாரப்பூர்வமாக திமுகவில் இருந்து தலைவர் துரைமுருகனை அனுப்பி வைத்தாரா..? ஒரு அமைச்சர்
வந்தார்களா..? நீங்கள் உங்க சொந்த பாசத்தால் வந்திருப்பீர்கள்…
குரல் : நாங்கள் எல்லாம் வந்தோமே….
ஆ.ராசா : நான் சொல்வதை கேளுங்கள்,
கனிமொழி வந்த பிறகுதான் எல்லா மந்திரிகளும் படை எடுத்து வந்தார்கள். எனக்குத் தெரியாது.
அந்த 2 மாதத்தில் என் மனநிலை என்னவாக இருந்திருக்கும், நான் வெடித்திருந்தால் என்னவாகி
இருக்கும்.?
அழகிரி ஒரு நாள் வந்தாரு. அதில்
ஒன்றும் ரகசியம் இல்லை. கனிமொழி வந்த பின் வந்த அழகிரி, கலைஞர் டிவிக்கு வாங்கி கொடுத்து
எல்லாம் ஸ்டாலின்தானாமுல்ல, நீயும், கனிமொழியும் எதற்கு சிறையில் இருக்கிறீர்கள். ஸ்டாலின்
தான் எல்லாமே என்று சொல்லவிட்டு அப்ரூவராகி விட்டு வெளியே வர வேண்டியது தானே என்றான்
அந்த ஆளு. சோதனைகள் எப்போது எல்லாம் வருகிறதோ, அப்போதெல்லாம், அரசியலில், அதுவும்
நாம பதவியில் இருந்துட்டோமே், கொஞ்சம் வெப்பத்தை தாங்கி கொள்ளுங்கள். படபடன்னு போகாதீர்கள்.
உங்களுக்கு இதோட எதிர்காலம் முடிந்து போய்விடவில்லை.
குரல் : நான் அமைதியா இருக்கிறேன்.
நீங்க சொல்வதைக் கேட்கிறேன்.
ராஜா: நான் கெஞ்சி கேட்கிறேன்…
நான் 2 முறை கேபினட் அமைச்சர், உச்சகட்டத்தில்
இருந்தேன், போக நாடுகள் இல்லை. அதனால் டென்ஷன் ஆக வேண்டாம்…
ஆடியோ உரையாடல் 2
ஆ.ராசா ; முட்டாள்தனம் செய்து, உணர்ச்சிவசப்பட்டு
தயவுசெய்து உன்னை கொடுத்துக்கொள்ளாதே, நமக்குள் இருக்கட்டும், கலைஞருக்குப் பிறகு கட்சி
அவரிடம் போகும், ஆனால் என் பிடியை விட்டு போகாது. போதுமா…?
காலத்திற்கு காத்திரு. ஆறு மாதமோ,
ஒரு வருடமோ காலநிலை மாறனும். நினைத்துப் பாருங்கள் நான் சிறையில் இருந்து வெளியே வந்த
பிறகு, நான் ஹீரோ, என் புத்தகம் ஒன்று வெளியே வருகிறது. ஆங்கிலத்திலும் வருது தமிழிலும்
வருது. இந்து ராம் படித்து விட்டு மலைத்துப்போய் விட்டார். என்ன சார் இது என கேட்டார்.
சோனியா காந்தியை, பிரணாப்முகர்ஜியை, மன்மோகன் சிங்கை, ப.சிதம்பரத்தை பிச்சு எடுக்கிறேன்.
அந்த புத்தகம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அது வரை அடக்கி வாசித்தேன். அதற்கு பிறகு
எனக்கு என்று தனி அடையாளத்தை ஏற்படுத்துவேன்.
எப்படி என்று கேளுங்கள் வடமாவட்டங்களில்
வன்னியர்கள் தான் என்று சிவசங்கர் சொல்வான். எங்கள் ஊரில் ஜாதி கிடையாது. வன்னியர்கள்
எல்லாம் என் நண்பன், சொந்த்தகாரன் போல். இப்போது நீலகிரிக்கு வந்தேன். கீழே கவுண்டர்
சமூகம். எந்த கவுண்டானவது என்னை எஸ்சி என்று பார்க்கிறானா.? எல்லா கவுண்டனும் வரிசையாக
நிற்கிறானா இல்லையா..? அப்போது ஜாதியை தாண்டி, வெளியே வந்து விட்டானா..?
போதுமான காசு இருக்கா, போதுமான
மூளை இருக்கா… கலைஞர்
இறந்து விட்டால். அதன் பிறகு கனிமொழி – ஸ்டாலின் பஞ்சாயத்தாகட்டும், இப்போது அவர்களுக்குத்
தான் பெரிய மூளை இருக்கா.? டெல்லி போகும் இங்கிலீஸ் கொட்டிக்குவாரா.. இன்னொன்று தங்கச்சியை
நம்ப மாட்டார். கனிமொழியை நம்ப மாட்டார்.
என்னை வெளியே தள்ள முடியாது .என்னை
சமூகரீதியாகவும் வெளியே தள்ள முடியாது, அறிவாலும் வெளியே தள்ள முடியாது, வேற செல்வாக்காலும்
வெளியே தள்ள முடியாது. வேறு லாக் ஒன்று வைத்திருக்கிறேன். நேரம் எனக்கே இப்போது சரியில்லை.
தலைவரிடம் எவ்வளவு வேணுமானாலும் பேசுவேன். இவர்கிட்ட பேச முடியாது. இவர்போய் முட்டிக்கிட்டு
திரும்பி வருகிறார் பாரு, இவர் தன்னை எம்ஜிஆர் என நினைத்துக்கொண்டு இருக்கிறார். தலைவருக்கு
பிறகு தான் ஒரு செட்பேக் வரும். எல்லா பிராண்டையும் போட்டு அடிப்போம்.
இந்து, எக்ஸ்பிரஸ் எல்லாரும் போட்டு
அடிப்போம். இப்பவே அப்படித் தானே அடித்துக்கொண்டு இருக்கிறார்கள். இவர் நினைக்கிறார்
நாம் எம்ஜிஆர் போல் வெற்றி பெறலாம் என்று. ஆனால் களம் அப்படி இல்லை. இப்பவும் அப்பாவே
தலைவரே கைதி போல் இருக்கிறார். இவர் டேக்ஓவர் பண்ணிவிட்டார். இப்போது போய் முட்டி
மோதினால், வேறமாதிரி இது போகும். ஓவர் நைட்ல எனக்காகன்னு கன்வீன்ஸ் பண்ணுங்க. வாங்க
நாம போவோம். மூவ் பண்ண வேண்டிய இடத்தில் மூவ் பண்ணுவோம்.
நான் சரியாகத்தானே சொல்கிறேன்.
உங்கள் கோரிக்கை நியாயமானது. தோற்கடிக்கணும் என்றால் தோற்கடி. அது தான் புத்திசாலித்தனம்.
ஒரு பிராமினுக்கும் நமக்கும் உள்ள வித்தியாசம், நாம அரிவாளை தூக்கினா அவன் அரிவாளை
தூக்க மாட்டான். ஆனால் கதையை முடித்துவிடுவான். சைலன்ட்டாக முடிச்சுடுவான்.