Share via:
ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்தப்படும்
என்று கடந்த 2021 தேர்தலில் திமுக வாக்குறுதி கொடுத்தது. அதேபாணியில் இப்போது கருணாநிதி
வீட்டு சிறையில் இருந்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என்று எடப்பாடி அறிவிப்பு
செய்திருக்கிறார்.
இதையடுத்து விசுவாசத்திற்கு எப்படி பாகுபலி
கட்டப்பா உதாரணமோ, அதேபோல் துரோகத்துக்கு எடப்பாடி பழனிசாமி என்று உதாரணம் காட்டி பேசி
பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
கருணாநிதி வீட்டுச்சிறையில் இருந்தது பற்றி
பேசும் திமுகவின் முக்கியப் புள்ளி ஒருவர் ‘’2006 திமுக ஆட்சியில், கருணாநிதி முதல்வராக
இருந்த காலகட்டத்திலேயே கருணாநிதி ஸ்டாலினை நினைத்து மனம் வெதும்பி இருந்தார் என்பதே
உண்மை. நடக்க முடியாது. அனைத்து விஷயங்களுக்கும் ஒருவர் உதவி செய்ய வேண்டும். முதல்வர்
என்பதால் உதவி செய்ய 100 பேர் இருந்தாலும், தன் மகன்கள் இருவரும் தான் எப்போது சாவோம்
என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது கருணாநிதிக்கு நன்றாகவே தெரியும். கையறு
நிலையில் தவித்துக் கொண்டு இருந்தார்.
கருனாநிதியிடம் பல தகவல்கள் மறைக்கப்பட்டன.
அவருக்கு தெரியாமல் அவர் குடும்பத்தினர் அதனை பேரும் தனித்தனியாக கொள்ளையடித்துக் கொண்டிருந்தார்கள்.
2 ஜி விவகாரம் வெளியானபோது, கருணாநிதி கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார். சர்காரியா கமிஷன்
விசாரணையால், பெரிய அளவில் ஊழல் செய்வதில் அவருக்கு அச்சம் இருந்தது. 1996-2001 ஆட்சி
காலத்தில் பெரிய ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால்
அவர் தளர்வடைந்ததும் 2006 ஆட்சியில், அவருக்கு தெரியாமலேயே பல விஷயங்கள் நடந்தன. அதில்
ஒன்றுதான் 2 ஜி.
அப்போபோ, ஸ்டாலின் தினம் தினம் கருணாநிதியிடம்
என்னை தலைவராக்குங்கள் என்று சண்டை போட்டுக் கொண்டே இருப்பார். அதன் காரணமாகத்தான்
ஸ்டாலினை துணை முதல்வராக்கினார். ஆனால் கட்சித் தலைவர் பதவியை மட்டும் ஸ்டாலினிடம்
கொடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். கொடுத்தால் இன்றைய ராமதாஸ் அய்யாவின்
நிலை தனக்கு ஏற்படும் என்பதை புரிந்து கொள்ளும் அளவுக்கு கருணாநிதிக்கு சாதுர்யம் இருந்தது.
மேலும் ஸ்டாலினுக்கு மூளை இல்லை என்ற விஷயம், ஆ.ராசாவை விட பெற்ற தந்தைக்கு தெரியாதா
? அதனால்தான் கடைசி வரை தலைவர் பதவியை ஸ்டாலினுக்கு கொடுக்கவேயில்லை. இறுதி நாட்களில்
கருணாநிதி வீட்டு சிறையில் இருந்தார் என்பது உண்மை. அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட
பிறகு கட்சி ஸ்டாலினின் முழுக்கட்டுப்பாட்டில் வந்தது என்பதும் உண்மை’’ என்கிறார்கள்.
இதையடுத்து இபிஎஸ், ‘’ ராசா சொன்னதை தான் நான் சொன்னேன். அப்பாவை சிறையில் அடைப்பது
நியாயமா..? உங்களை ஆளாக்கி இந்தியாவே உங்களை பாராட்டுகின்ற அளவுக்கு எம்.எல்.ஏ, அமைச்சர்,
துணை முதல்வர், செயல் தலைவர் ஆக்கினாரே, அதற்காக உங்கள் தந்தையை வீட்டுச் சிறையில்
வைத்ததாக ராசா சொல்கிறார். அழகிரியும் சொல்றார். (அழகிரி பேசியதற்கு ஆதாரம் காட்டுகிறார்)
ராசா உண்மையைச் சொன்னால் இருக்கும் இடம் வேறாக மாறிவிடும். ஸ்டாலின் பேசப்பேச அது,
உண்மையாக இருக்குமோ என்று தோன்றுகிறது. அண்ணனை ஒதுக்கிவிட்டீர்கள், தங்கையை மாநில அரசியலுக்கு
வராமல் தடுத்துவிட்டீர்கள். உங்க அப்பா கடைசி வரை உங்களுக்கு தலைவர் பதவி கொடுக்கவில்லை,
அந்த அளவுக்கு நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தவர் ஸ்டாலின்.
அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஆராசா ஆடியோ செய்தியை
விசாரணை மேற்கொண்டு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். எங்க அம்மா இறந்தபோது என்னவெல்லாம்
பேசுனீர்கள்..?
2021 தேர்தலில் 22வது வாக்குறுதியில் முன்னாள்
முதலமைச்சர் அம்மையார் ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து கழக ஆட்சியில் முறையான விசாரணை
நடத்தப்பட்டு, தவறு இழைத்தவர் எவராயினும் அவர் உரிய சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார்
என்று அறிவித்திருந்தீர்கள். இப்போது நான் சொல்கிறேன், கலைஞர் அவர்களை வீட்டுச் சிறையில்
வைத்தவர்கள் சட்ட ரீதியாக விசாரிக்கப்பட்டு, உண்மையிருந்தால் அதிமுக அரசு நடவடிக்கை
எடுக்கும். அவரும் முன்னாள் முதல்வர்தானே. தந்தைக்கே இந்த கதி என்றால் நாட்டு மக்களுக்கு
என்ன கதி என்று எண்ணிப்பாருங்கள்..’’ என்று பேசியிருக்கிறார்.
இதற்கு பதிலடியாக ஸ்டாலின், ‘’எடப்பாடி துரோகம்
பண்ணாத தரப்பே தமிழ்நாட்டில் இருக்க முடியாது. மூன்று வேளாண் சட்டங்களை ஆதரிக்கும்
ஊழவர்களுக்கு துரோகம், பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி செய்து
பெண்களுக்கு துரோகம். குடியுரிமை மற்றும் வக்ஃபு திருத்த சட்டம்,பாஜகவோட எல்லா சட்டங்களுக்கும்
ஆதரவு கொடுத்து சிறுபான்மை சமூகத்திற்கு துரோகம். கட்சியில் உங்களை வளர்த்துவிட்ட
செங்கோட்டையனுக்கு துரோம், பதவி கொடுத்த அம்மையார் சசிகலா, டிடிவி.தினகரனுக்கு துரோகம்,
சகோதரர் ஓபிஎஸ்க்கு துரோகம், உங்கள் ஆட்சியை காப்பாற்றிய முன்னாள் சபாநாயகர் தனபாலுக்கு
சீட்டு கொடுக்காமல் துரோகம். எல்லாவற்றிற்கும் மேல மாநில உரிமைகளுக்கு எதிராக செயல்பட்ட
பாஜகவை எதிர்த்த ஜெயலலிதாவிற்கு அதே பாஜகவோடு கூட்டணி வைத்து துரோகம் செய்திருக்கிறார்.
இப்போது நான் சொன்ன துரோகத்தை உங்களால் எண்ண முடிந்ததா…ஆனால் இபிஎஸ் உடைய தோல்விகளை
நீங்கள் எண்ணிவிடலாம். ஏற்கனவே 10 அடுத்தது 11 இல்லையா…
பாகுபலி படத்தில் சத்தியராஜை பார்த்து சொல்கிற
மாதிரி ஒரு டயலாக் வரும், விஸ்வாசத்திற்கு ஒரு உருவம் இருந்தால் அது நீ தான் கட்டப்பா
என்ற வசனம் வரும். அதேபால் துரோகத்திற்கு ஒரு உருவம் கொடுத்தால் அது பழனிசாமி தான்.
இப்படி தன்னையே நம்பிய அத்தனே பேருக்கும் அல்வா கொடுத்த இபிஎஸ் பேசுவதை மக்கள் எப்படி
நம்புவார்கள்.?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
