News

விஜய் ரோட்டில் இறங்கிட்டாரு… புல்லரிக்கும் விசில் ரசிகர்கள்

Follow Us

அரசியல் கட்சித் தலைவர்கள் ஸ்டாலின் தொடங்கி சீமான் வரையிலும் அவர்கள் விருப்பப்பட்ட இடங்களில் எல்லாம் பிரசாரம் செய்துவருகிறார்கள். ஆனால், விஜய்க்கு மட்டும் பிரசாரம் ரத்து செய்யப்படும் வகையில் அனுமதி கொடுப்பதும், மறுப்பதுமாக விளையாடுகிறார்கள் என்று விஜய் ரசிகர்கள் கொதிக்கிறார்கள்.

சென்னை வில்லிவாக்கம், அண்ணா நகர், விருகம்பாக்கம் மற்றும் டி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்ய அனுமதி கோரி தமிழக வெற்றிக் கழகம் காவல்துறைக்கு கடிதம் அனுப்பியது.

இதனைத் தொடர்ந்து காவல்துறை சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில், வில்லிவாக்கம் தொகுதிக்குட்பட்ட சிட்கோ நகரில் மட்டும் ஒரு மணி நேரம் பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், டி.நகர் போன்ற நெரிசலான பகுதிகளில் விஜய்யின் வருகையால் கடுமையான போக்குவரத்து சிக்கல்கள் உருவாகும் அபாயம் இருப்பதாக கூறி அனுமதி மறுக்கப்பட்டது.

கூட்ட நெரிசலால் பெண்கள், குழந்தைகள் பாதிக்கப்படுவதுடன், ரசிகர்கள் கட்டுப்பாடின்றி பின்தொடர்வதால் விபத்துகள் ஏற்படும் சம்பவங்களும் கடந்த சில நாட்களாக பதிவாகி வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் கடுமையாக்கியுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், விஜய் கோரிய நேரத்திற்கும் காவல்துறை வழங்கிய அனுமதி நேரத்திற்கும் இடையே பொருந்தாத நிலை ஏற்பட்டதால், இன்று நடைபெற இருந்த பிரச்சாரம் முழுமையாக ரத்து செய்யப்பட்டதாக கட்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

300 தொண்டர்கள் வரைக்கும் தான் வரணும்னு காவல்துறை நிபந்தனையாம்.. பொதுவெளியில 300 பேர் தான் வரணும்ன்னு எப்படி சொல்ல முடியும்? பொது வெளியில் வருவது மக்கள்.. எத்தனை மக்கள் வருவாங்கன்னு எப்படி கணிச்சு சொல்ல முடியும்.. தாண்டி வர மக்களை வரக்கூடாதுன்னு எப்படி சொல்ல முடியும்?

ஒரு மணி நேரத்தில் குறிப்பிட்ட இடத்துக்கு எப்படிச் செல்ல முடியும்..? இதெல்லாம் திட்டமிட்டு நடத்தும் வன்முறை. விஜய்க்கு எதிராக நடத்தப்படும் இந்த சூழ்ச்சி எல்லாமே அவருக்கு சாதகமாக மாறும். களத்திற்கு வராமலே விஜய்யால் ஜெயிக்க முடியும் என்று அவரது ரசிகர்கள் விசிலடிக்கிறார்கள்.

அதேநேரம், காவல்துறையினர் விளக்கம் வேறு மாதிரி உள்ளது. அதாவது விஜய்யாலே அவரது ரசிகர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்களைக் கட்டுப்படுத்த தடியடி போன்றவை பிரயோகித்தால் சிக்கல் அதிகமாகிவிடும். அதனாலே கடுமையான விதிமுறைகள் வகுக்கப்படுகின்றன என்கிறார்கள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link