Share via:
தேர்தல் பரப்புரையில் திமுகவுக்கும் அதிமுகவும் இடையில் மோதல்
ஆரம்பித்துவிட்டது. எடப்பாடி பழனிசாமி முழு சங்கியாக மாறிவிட்டார்’ என்று ஸ்டாலின்
பேசிய குற்றச்சாட்டை மறுத்து சிவகங்கையில் எடப்பாடி பழனிசாமி பேசியது வைரலாகிவருகிறது.
வாஜ்பாயுடன் கலைஞரும் முரசொலி மாறனும் இருக்கும் புகைப்படத்தைக்
கட்டி “உங்கள் அப்பாவும் மாமாவும் சங்கியா?” என்று கேட்டு பரபரப்பைக் கிளப்பினார்.
உடனே ஸ்டாலின், ‘நாங்கள் பாஜக ஆட்சியில் இருந்தாலும் கடிவாளம்
எங்கள் கையில் இருந்தது’ என்றார் ஸ்டாலின்.
இதற்கு இப்போது அதிமுகவினர் செம பதிலடி கொடுத்துவருகிறார்கள்.
’’வாஜ்பாய் அரசு கவிழ்ந்த நேரத்தில் உடனே தேர்தல் கூட்டணியில் எங்களை சேர்த்துக் கொள்ளுங்கள்
என கருணாநிதியும் மருமகன் மாறனும் டெல்லியில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக தலைவர்களின் காலில்
விழுந்தது மறந்துவிட்டதா, அதுதான் சங்கித்தனம்.
வாஜ்பாய் ஆட்சியில் 2003 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமை
சட்ட திருத்த மசோதாவை கண்மூடித்தனமாக ஆதரித்துவிட்டு, 2019 சட்டத்தை மட்டும் எதிர்த்த
சந்தர்ப்பவாதிகள் நீங்கள் தான் முழு சங்கி.
பெற்றோர்களில் ஒருவர் இந்தியராக இருக்க வேண்டும், இருந்தால் மட்டுமே
அவர்களது குழந்தைக்கு குடியுரிமை தரப்படும் என வாஜ்பாய் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட குடியுரிமை
சட்ட திருத்த மசோதாவுக்கு வாக்களித்த திமுக தான் முழு சங்கி.
கோவை கலவரத்தின் போதும், கோவை கலவரத்திற்கு முந்தைய / பிந்தைய
காலங்களில் பாஜகவுடன் தேர்தல் கூட்டணி வைத்தவர்கள் யார் ? நீங்கள் தான் .
எச். ராஜாவை ஜெயிக்க வைத்த நீங்கள் தான் முழு சங்கி.
கோவை கலவரத்தின் போது அப்பாவி 19 முஸ்லிம் இளைஞர்களை சுட்டுக்
கொன்ற கருணாநிதியும் அவரது மகனும் தான் சங்கி.
இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியும்,
அப்போதைய சட்ட அமைச்சர் ஆலடி அருணாவும் சட்டசபையில் சிறுபான்மை மக்களை தீவிரவாதிகள்
என குறிப்பிட்ட கருணாநிதியும் அவரின் கட்சியும் தான் முரட்டு முழு சங்கி.
குஜராத் கலவரம் நடைபெற்று அப்பாவி இஸ்லாமிய மக்கள் 3000 நபர்கள்
படுகொலை செய்யப்பட்டபோது அது ஒரு மாநிலத்தில் நடந்த சட்ட ஒழுங்கு பிரச்சனை அதை பெரிதுபடுத்த
தேவையில்லை என்று சொன்ன கருணாநிதி தான் அடிமை முழு சங்கி.
குஜராத் கலவரத்தை அடக்குவதற்காக இராணுவத்தை அனுப்புங்கள் என பிரதமர்
வாஜ்பாய்க்கு அப்போதைய ஜனாதிபதி கே ஆர் நாராயணன் கடிதம் எழுதிய போது வாஜ்பாயின் கூட்டு
மந்திரி சபை கள்ள மவுனம் சாதித்தது. அதில் எட்டு மந்திரிகளை வைத்து அதிகாரத்தையும்
பதவியையும் அனுபவித்து வந்த கருணாநிதியும் அவரது குடும்பமும் தான் முழு அடிமை சங்கி.
ஆர்.எஸ்.எஸ் ஒரு சமூக சீர்திருத்த இயக்கம், ஆர்எஸ்எஸ் குறித்து
தவறான கருத்தை மக்களிடையே இருந்து மாற்ற திமுக இளைஞரணி பாடுபட வேண்டும் என முரசொலியில்
எழுதிய கருணாநிதி தான் முரட்டு முழு சங்கி.
கருணாநிதியின் சிலையை திறப்பதற்கு மூத்த ஆர்எஸ்எஸ் தலைவர் வெங்கையா
நாயுடு, கருணாநிதியின் பெயரில் நாணயம் வெளியிட்ட ஆர்எஸ்எஸ் இன் மூத்த தலைவர் ராஜ்நாத்
சிங், கருணாநிதியின் திருவுருவ படத்தை சட்டசபையில் திறந்து வைத்தது முரட்டு சங்கியான
முன்னாள் ஜனாதிபதி .இப்போது குறிப்பிடுங்கள் யார் முழு சங்கி என ? திமுகவைக் காட்டிலும்,
கருணாநிதியைக் காட்டிலும், ஸ்டாலினைக் காட்டிலும் முழுச்சங்கி வேறு யாருமேயில்லை என்று
போட்டுத் தாக்கியிருக்கிறார்கள்.