Share via:
விஜய்யின் தவெகவை எப்படியாவது தங்கள் பக்கம் வளைத்துப் போட்டுவிடலாம்
என்று பாஜக எடுத்த பகீரத முயற்சி தோல்வியில் முடிந்துவிட்டது. எனவே, இன்று பியூஸ் கோயல்
சென்னைக்கு வருவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில், எடப்பாடிக்கு நேற்று டெல்லியில்
இருந்து அழைப்பு வந்தது.
இதையடுத்து நேற்று டெல்லிக்குப் போன எடப்பாடி பழனிசாமி அமித்ஷாவை
சந்தித்துவிட்டு சென்னைக்குத் திரும்பிவிட்டார். பாஜகவிற்கு கடந்த தேர்தலில் 20 தொகுதிகள்
ஒதுக்கப்பட்ட நிலையில் இப்போது 24 தொகுதிகள் கொடுப்பதற்கு எடப்பாடி பழனிசாமி தயாராக
இருக்கிறார். ஆனால், பாஜக 40 தொகுதிகள் கேட்ட நிலையில் இப்போது 30 தொகுதிகளுக்கு வந்திருக்கிறது.
நேற்றைய தினம் எடப்பாடியுடன் நடந்த பேச்சுவார்த்தையில் அமித்ஷா
29 தொகுதிகளுக்கு கீழே போட்டியிட முடியாது என்று கூறியிருக்கிறார். அதாவது, திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை
விட, தங்களுக்கு ஒரு இடமாவது கூடுதலாக இருக்க வேண்டும், அப்போதுதான் காங்கிரஸ் கட்சியை
விட தங்கள் கட்சி பெரிதானது என்ற எண்ணம் மக்களிடம் உருவாகும் என்று சொல்லியிருக்கிறார்.
ஆனால், இபிஎஸ் அதற்குத் தயாராக இல்லை என்று சொல்லப்படுகிறது. அதனாலே
தாங்கள் விரும்பும் தொகுதிகளை பெறுவதற்கான
டீலிங்கை முடிக்கும் முக்கிய பொறுப்பு பியூஷ் கோயலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.. எனினும்
அவருக்கு முன்னதாகவே, மத்திய இணையமைச்சர் எல். முருகன் மற்றும் பாஜக மாநிலத் தலைவர்
நயினார் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து, டெல்லி தலைமையின் வழிகாட்டுதலின்படி
முதற்கட்ட விவாதங்களை நடத்தி முடிக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். எனவே, இன்று முதல்
அதிமுக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்கிறார்கள்.
எப்படியாயினும் 26 தொகுதிகளுக்கு மேல் பாஜகவுக்கு இல்லை என்கிறார்
எடப்பாடி. யார் ஜெயிக்கப்போவது என்பது இரண்டு
நாட்களில் தெரிந்துவிடும்.
