News

கூட்டணியை கோட்டை விட்ட விஜய்… வேட்பாளர்கள் எங்கேப்பா..?

Follow Us

 

இதுவரை போட்டியிட்ட அத்தனை தேர்தல்களிலும் சீமான் தோல்வி அடைந்துவிட்டார் என்றாலும் முயற்சியைக் கைவிடாமல் இந்த தேர்தலில் தனியே நிற்கிறார். இந்த தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சி ஆட்சி செயற்பாட்டு வரைவு 2026 இன்று சீமானால் வெளியிடப்பட்டது.

49 தலைப்புகளில் 462 பக்க வாக்குறுதிகளை சீமான் வெளியிட்டார். அதில் ஏழ்மை ஒழிப்பு, விவசாயம், மக்கள் நலன் என்றெல்லாம் பேசும் சீமான், இந்த வெளியீட்டு விழாவை லீ ராயல் மெரிடியன் ஹோட்டலில் சொகுசாக வைத்ததுதான் எல்லோருக்கும் ஆச்சர்யம்.

அவரது முக்கியமான தேர்தல் வாக்குறுதிகள் மட்டும் இங்கே.

·       தமிழ்நாட்டிற்கு ஐந்து தலைநகரங்கள். • சென்னை • கோயம்புத்தூர் • திருச்சிராப்பள்ளி • மதுரை • கன்னியாகுமரி

·       பூரண மதுவிலக்கு அமலுக்கு வரும்.

·       குடிநீர் விற்பனைக்கு தடை, தூய குடிநீர் இலவசம். குளம்,ஏரி, ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் கலக்கும் கழிவு நீர் முற்றிலுமாக தடுக்கப்படும். இலவச குடிநீரை அரசே வழங்கும்

·       ஆற்றங்கரையோரங்களில் தொழிற்சாலைகள் செயல்பட தடை விதிக்கப்படும் • கொக்கோ கோலா உள்ளிட்ட குளிர்பான தொழிற்சாலைகளுக்கு தடை விதிக்கப்படும்.

·       மாநில அரசின் கையில் இரயில்வே. உள்ளூரில் ஓடும் ரயில்களை மாநில அரசே நிர்வகிக்க சட்டம் கொண்டுவரப்படும்.

·       வசூலிக்கப்படும் வரியில் மாநில அரசுக்கு 75%, மத்திய அரசுக்கு 25% வழங்கும் வகையில் மாற்றம் கொண்டுவர முயற்சிப்போம்.

·       தனியாருக்கு கொடுக்கப்பட்ட அனைத்து ஒப்பந்தங்களும் நாம் தமிழர் ஆட்சி நீக்கம் செய்யும். கனிமவளக் கொள்ளைக்கு எதிராக கடும் தண்டனைகளுடன் கூடிய புதிய சட்டங்கள் இயற்றப்படும். மணற்கொள்ளையை தடுக்க மாநிலம் முழுவதும் தனிப்படை அமைக்கப்படும்

·       தமிழ் மொழியில் மருத்துவ கல்வி

·       தமிழ்நாட்டில் அரசு வேலைகளில் பெண்களுக்கு சரிபாதி பங்கு அளிக்கப்படும்.

·       சி.பா.ஆதித்தனார் பெயரில் விளையாட்டு பல்கலைக்கழகம்.

·       திருநங்கைகள், திருநம்பிகளுக்கு தனி மருத்துவமனை அமைக்கப்படும். பொது மருத்துமனைகளில் நோயாளிகளின் உறவினர்கள் தங்க தனி விடுதி அமைக்கப்படும்.

·       மூன்று மரங்கள் நட்டுவிட்டு ஒரு மரத்தை வெட்டு என்று சட்டம் இயற்றப்படும் நீா்நிலைகளின் கரையை பலப்படுத்த அரச மரம்,பூவரச மரம்,வேப்ப மரங்கள் நடப்படும். ஆறுகளில் 15 கிலோ மீட்டரில் ஒரு தடுப்பணை கட்டப்படும்

·       தூய்மைப் பொறியாளர்கள் தனியார்மயமாக்கலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். அவர்களுக்கு உயரந்த சம்பளம், மேம்படுத்தபட்ட பாதுகாப்பு உடைகள் கிடைக்கும்.

·       உழுபவரே விலையை உறுதிபடுத்த வேண்டும். வேளாண்மை அரசுப் பணி,  நெல் செயராமன் விதை வங்கி, நம்மாழ்வார் இயற்கை வேளாண் கல்லூரி உருவாக்கப்படும்.

இன்னும் என்னென்னமோ சொல்லியிருக்கிறார். எல்லாம் பேசவும் கேட்கவும் நல்லாத்தான் இருக்குது. ஆனா…. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link